இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) சார்பில் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம்

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில், கல்லூரிக்கு வருகை தரும் மாணவிகளை தொடர்ந்து இழிவாகவும் கொச்சையாகவும் பேசிய கல்லூரி முதல்வர் சத்தியா அவர்களை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) சார்பில் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

தினந்தோறும் கல்லூரிக்கு வருகை தரும் மாணவிகளை வெளியே நிற்க வைத்து, தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவிகள் பயன்படுத்தக்கூடிய ஓபன் டாப் அணியக்கூடாது அம்பர்லா டாப் மட்டுமே அணிய வேண்டும் அப்பொழுது தான் உனக்கு பாதுகாப்பு என்றும் இல்லையென்றால் மாணவர்கள் உங்களை கேலி செய்வார்கள் என்றும் பாலியல் துன்புறுத்தல்கள் எதுவும் நடக்காது என்றும்
“உன் ஆடை சரியாக இல்லை”, “நீ ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்திருக்கிறாயா?”, “யாருடன் போயிட்டு வருகிறாய்?”, “நீ கல்லூரிக்கு வந்திருக்கிறாயா அல்லது ஷாப்பிங் வந்திருக்கிறாயா?”
என இழிவாகவும் அவமதிப்பாகவும் பேசும் செயல்களில் முதல்வர் சத்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனை கண்டித்து, அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டம், இந்திய மாணவர் சங்கத்தின் கிளைத் தலைவர் பிரதீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் வைரவளவன் மாவட்டச் செயலாளர் ஆமோஸ், கல்லூரி கிளைச் செயலாளர் துளசிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *