திருச்சி மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கைகளுக்காக தொடர் முயற்சிகளில் துரை வைகோ எம்.பி.

இன்று (06.02.2026) மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா துரை வைகோ எம்.பி சந்திப்பு.

இந்த சந்திப்பில், திருச்சி மக்களின் நீண்டநாள் பாதுகாப்பு கோரிக்கைகளான இரண்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து துரை வைகோ எம்பி விளக்கம்.

ஏற்கனவே பலமுறை இது தொடர்பாக இத்துறையின் முக்கிய அமைச்சர் மாண்புமிகு நிதின் கட்கரி அவர்களிடம் எடுத்துரைத்துள்ளதையும் விளக்கி பின் இவற்றை பற்றி விரிவாக எடுத்துரைத்த துரை வைகோ எம்.பி:

முதலாவதாக, ஜி கார்னர் போக்குவரத்து சந்திப்பில் உள்ள போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய அவசியத்தையும், அதற்கு துரை வைகோ எம்.பி மேற்கொண்டுள்ள தொடர் முயற்சியின் நகர்வுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது, ஜி கார்னர் பகுதியில் உள்ள போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு தீர்வாக உயர்மட்ட சுழல் பாலம் ( Elevated rotary) அமைப்பது மட்டுமே தீர்வு என்பதை எடுத்துரைத்தார் துரை வைகோ எம்.பி.
இதற்காக ரயில்வே நிலம் தொடர்பான அனுமதி கிடைக்க வேண்டி 30.01.2026 அன்று தனது ஏற்பாட்டில் சென்னையில் நடந்த ஒருங்கிணைப்புக் கூட்டம் குறித்தும் விளக்கினார். அந்தக் கூட்டத்தில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர், திருச்சி கோட்ட DRM மற்றும் NHAI அதிகாரிகள் பங்கேற்றிருந்ததையும், அதன் மூலம் எட்டப்பட்ட முடிவுகளையும் எடுத்துரைத்தார் துரை வைகோ எம்.பி.
இது தொடர்பான NHAI தலைமையகத்தின் முடிவு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இரண்டாவதாக, சஞ்சீவி நகர் மற்றும் Y Junction போக்குவரத்து சந்திப்பில் வாகன கீழ்ப்பாதை (VUP) அமைக்கும் பணிகள் தொடர்பாக விவாதித்தனர்..
கடந்த 15 ஆண்டுகளில் பல உயிரிழப்புகளுக்கு காரணமான இந்த பகுதிகளில், வாகன கீழ்ப்பாதை (Vehicular Underpass) பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார் துரை வைகோ எம்.பி.
திட்டம் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டும் , திட்ட மதிப்பீடு உட்பட அனைத்தும் ஏற்கனவே முடிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது,
டெண்டர் அனுமதி நடைமுறைகளை விரைவுபடுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இந்த இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்கும் விரைவான தீர்வு கிடைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் உறுதி அளித்தார்.

சந்திப்பிற்குப்பின் செய்தியாளர்களிடையே பேசிய துரை வைகோ எம்.பி
திருச்சி மக்களின் இந்த 15 ஆண்டுகளுக்கும் மேலான கோரிக்கைகள் நிறைவேறும்வரை தொடர்ந்து போராடுவேன் என உறுதிபட நம்பிக்கை தெரிவித்தார்..

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருவெறும்பூர் அருகே சமுத்தி குள பாசன விவசாயிகள் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜிக்கு நன்றிகளை தெரிவித்ததோடு விரைவில் சமுதிக்குள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்

    திருச்சி திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் 214 ஏக்கர் பரப்பளவில் சமுத்தி குளம் உள்ளது இதன் மூலம் 478 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகின்றன. இதில் தனிநபர்கள் வீடுகள் கட்டி ஆக்கிரமித்து வருவதாகவும் மேலும் அங்கு பிளாட் போட்டு விற்பனை…

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *