
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கதிரவன்.
் இவர் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் பண்பாளர் தன்னுடைய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கி வருபவர். மிகவும் அமைதியான சுபாவம் உடைய இவரோடு பத்திரிக்கையாளர்கள் என்றென்றும் அன்போடும் மதிப்போடும் பழகி வந்தனர்.
இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு கதிரவன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்ற பத்திரிக்கையாளர்களை பல மணி நேரங்களுக்கு உச்சி வெயிலில் நிற்க வைத்து அவர்களை கதிரவன் அவர்கள் சந்திக்க இயலாதபடி அங்கிருந்த அவருடைய உதவியாளர்கள் நடந்து கொண்டதாகவும் மேலும் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசி அவமானப்படுத்தியதாகவும் நம்மிடையே சக பத்திரிகையாளர்கள் மிகவும் வருத்தத்துடன் கூறினர்.
கதிரவன் அவர்களின் உதவியாளர்களின் இந்த செயல் திரு கதிரவன் அவர்களின் கவனத்திற்கு சென்றதா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் தீபாவளி வாழ்த்து சொல்வதற்காக சென்ற எங்களை அவருடைய உதவியாளர்கள் இப்படி இழிவு படுத்தியது எங்களை மனதளவில் மிகவும் காயப்படுத்தி விட்டது என்று வருத்தத்துடன் கூறினார்கள்.