ரமேஷ் எனும் நான் – நேற்று சாமானியன் இன்று சட்டமன்ற உறுப்பினர்

இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தில் ஒரு பாடலின் வரிகள் மிக முக்கியமானவை.

” இவன் பேரே வரலாறு அழித்தாலும் அழியாது ஜனநாயகன்”.

இந்தப் பாடலின் வரிகள் தளபதி விஜய் அவர்களுக்கு எப்படி பொருத்தமாக அமைந்துள்ளதோ அதைப் போலவே அவருடைய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றிருக்கும் 34 வயதான இளம் சிங்கம் ரமேஷிற்கு இது சாலப் பொருந்தும்.

மிக மிக சாதாரணமான ஒரு குடும்பத்திலிருந்து படித்து பட்டம் பெற்று எல்லா சாமானிய இளைஞர்களை போலவே மாத சம்பளத்திற்கு வேலை பார்த்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ரமேஷ் அவர்கள் தான் இப்படி ஒரு உயர்ந்த இடத்திற்கு வருவோம் என்று நினைத்திருப்பாரா என்பது நமக்கு தெரியவில்லை ஆனால் தான் மிகப்பெரிய சாதனைகளை செய்யக்கூடிய ஒரு வெற்றியாளனாக உருவாகுவோம் என்கின்ற வேட்கை அவர் உள்ளத்தில் இருந்திருக்கிறது என்பது இன்றைக்கு நிதர்சனம் ஆகி இருக்கின்றது.

சட்டமன்றத் தேர்தலின் பொழுது அரசியலில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட மற்ற வேட்பாளர்களுக்கு இடையே சிறு குழந்தையை போல மக்களிடையே நுழைந்து வந்த ரமேஷ் மாபெரும் வெற்றியை பெற்று ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி மக்களின் ஏகபோக அன்பிற்கு ஆதரவிற்கும் பாத்திரமானார்.

இன்று சட்டமன்றத்தில் “ரமேஷ் எனும் நான்” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு சட்டமன்ற உறுப்பினராக அமர்ந்த அவர் ஒரு இணையதள ஊடகத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்த ஒரு எக்ஸ் தள பதிவு நம் கண்களில் சிக்கியது. சற்றே அதிர்ந்து தான் போனோம். ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு சாமானியனாக இருந்த நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் திரு ரமேஷ் அவர்கள் தனக்கான வேலையை விண்ணப்பித்திருந்ததை அந்த இணையதள ஊடகத்தின் ஆசிரியர் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்ததோடு திரு.ரமேஷ் அவர்களின் இந்த வளர்ச்சியையும் பெருமையோடு குறிப்பிட்டிருந்தார். அவரின் பதிவை அப்படியே நாம் தமிழாக்கம் செய்து தந்திருக்கின்றோம் வாசகர்களின் பார்வைக்காக.

கடின உழைப்பு ஒருவரின் வாழ்க்கையை உண்மையிலேயே உயர்த்தும் என்பதற்கு #TVK-வில் பல உதாரணங்களைக் காணலாம். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, TVK ரமேஷ் ஒரு சாதாரண இளைஞராக இருந்தார். அந்த நேரத்தில், TVK கட்சியே இன்னும் தொடங்கப்படவில்லை. எனது X பக்கத்தில் நான் பதிவிட்ட ஒரு வேலை விளம்பரத்திற்கு அவர் பதிலளித்து, வேலை கேட்டிருந்தார். நான் நீண்ட காலமாக X-ஐத் தவறாமல் பயன்படுத்தாததால், அவரது செய்தியை மிகவும் தாமதமாகப் பார்த்தேன். அதற்குள், ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது, நான் அவருக்குப் பதிலளிக்கவே இல்லை.

பின்னர், TVK தொடங்கப்பட்ட பிறகு, அது வளர்ந்து பல மாதங்கள் ஆன நிலையில், அதே நபர் இப்போது TVK ரமேஷ் என்று அடையாளம் காணப்படுவதை நான் தற்செயலாகக் கவனித்தேன். நாம் கட்சியை அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம், ஆனால் வலுவான பின்னணி இல்லாத சாதாரண இளைஞர்களை அதிகாரத்தின் மையங்களுக்குக் கொண்டு வருவது உண்மையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

அவர் சார்ந்த சமூகத்துடன் இணைந்திருக்கும் சமூகப் பார்வைகள் மற்றும் வரம்புகளைத் தாண்டி, அவரை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது அவரது திறமை, உறுதிப்பாடு மற்றும் அயராத முயற்சியே ஆகும். இன்று, அவர் தனது குடும்பத்துடன் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்க வந்த காட்சிகளைப் பார்த்தேன். அதைப் பகிர்வது பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றியது.

நான் ரமேஷிடம் தனிப்பட்ட முறையில் பேசியதே இல்லை, ஆனால் அவரைப் போன்ற இளைஞர்கள் வாழ்வில் உயர்வதைப் பார்ப்பது ஒரு நேர்மறையான தொடக்கமாகும்.

இந்தப் பதிவு அவரை எந்த வகையிலும் சிறுமைப்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல. ஒருவர் உண்மையாக முயற்சித்தால் எதுவும் சாத்தியமற்றது அல்ல என்பதைக் காட்டுவதற்காகவே இது எழுதப்பட்டுள்ளது. இன்று ரமேஷ் ஒரு சட்டமன்ற உறுப்பினர், நாளை அவர் ஒரு அமைச்சராகக் கூட ஆகலாம்.

வாழ்த்துக்கள் ரமேஷ் 💐

இது திரு ரமேஷ் அவர்களைப் போன்று சாமானியர்களாக பிறந்து மாபெரும் வெற்றிகனிகளை சுவைப்பதற்கு காத்திருக்கும் எண்ணற்ற தமிழ் இளைஞர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை விதைக்கும் பகிர்வாக இருக்கும் என்ற காரணத்தினாலே இதை நாம் நமது வலைதள பக்கத்தில் பதிவு செய்கின்றோம்.

சுறா திரைப்படத்தில் நம்முடைய முதலமைச்சர் தளபதி விஜய் அவர்கள் ஒரு பாடலை பாடியிருப்பார். “வெற்றிக்கொடி ஏற்று வீசும் நம்ம காத்து வரும் காலம் நம்ம கையில் தான் டா கட்டுமரம் போல ஒட்டி இருப்போமே நம்மை வெல்ல யாரு இங்கே டா”

இந்தப் பாடல் எனக்கு தேசிய கீதம் போல ஒவ்வொரு நாளும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். இந்தப் பாடலை கேட்கும் பொழுதெல்லாம் எனக்குள் ஒரு வித உற்சாக ஊற்று பிறப்பெடுக்கும். திரைப்படங்களில் கூட தன்னம்பிக்கை விதைகளை விதைத்த நம்முடைய தமிழக முதலமைச்சர் தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய தளகர்த்தர்கள் ஒவ்வொருவரையும் தன்னம்பிக்கையின் கருப்பொருளாக உருவாக்கி இருக்கின்றார். அந்த வகையில் திரு.ரமேஷ் அவர்கள் நம்முடைய முதலமைச்சர் அவர்களின் சிம்மாசனத்தில் வைரக்கல்லாக ஜொலிக்கின்றார் .

நேற்றைய சாமானியன் இன்றைய மக்கள் நாயகனாக உயர்ந்து நாளை மக்கள் விரும்பும் மந்திரியாக உயர வேண்டும் என்பது நம்முடைய ஆசை மட்டும் அல்ல ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் ஒவ்வொரு வாக்காளரின் ஆசிகளும் ஆகும்.

“ரமேஷ் உன் பெயரே வரலாறு”. அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ரமேஷ். உங்கள் தலைவரை போல நம்முடைய முதல்வரை போல வெற்றி கொடி ஏற்றி வரும் காலத்தில் சாதனைகள் பல படைக்க மனதார வாழ்த்துகின்றோம்.

NTTadmin

ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

Related Posts

108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரை ஆட்சி அமைக்க தாமதிக்காமல் அழைப்பு விடுக்க வேண்டும். – துரை வைகோMP

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம். தலை வணங்கி ஏற்கிறோம்.ஆனால் தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டமன்றம் அமைவதற்கு வழி வகுத்து விட்டது என்ற கவலையும் அடைகிறோம். ஏனெனில் தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தல்களில் மிகத் தெளிவான தீர்ப்பை இதுவரை…

TVK ல் இணைகிறார் முன்னாள் DGP ?

தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் முன்னாள் டிஜிபி R.நடராஜ் IPS அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய பிரமுகரும், மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மேனாள் காவல்துறை தலைவருமான R.நட்ராஜ் IPSவிரைவில் தமிழக வெற்றி கரகத்தின் தலைவர் விஜய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *