ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகம் எங்கே அரங்கன் கூட நேரில் காட்சி கொடுத்து விடலாம் ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தை கண்டுபிடிப்பது எப்படி பொதுமக்கள் திண்டாட்டம்

ஸ்ரீரங்கம் தாலுக்கா அலுவலகம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 50 கிராமங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தாலுகா அலுவலகம் ஆகும் ஆனால் இந்த அலுவலகம் எங்கு உள்ளது என்பதை கண்டறிவது என்பது பொதுமக்களுக்கு சிந்துபாத் கதையாக தொடர்கின்றது ஸ்ரீரங்கத்தை அரங்கனை கூட சென்று தரிசித்து விடலாம் ஆனால் தாலுகா அலுவலகத்தை கண்டுபிடித்து தங்கள் பணிகளை முடிப்பது என்பது ஒவ்வொரு சாமானியனுக்கும் குதிரைக்கொம்பு ஆகும்

தாலுக்கா அலுவலகம் இருக்கும் இடத்தை வழி காட்டுவதற்கு முறையான பெயர் பலகைகளோ அடையாளங்களோ இல்லாமல் ஒரு ஓரத்தில் தாலுக்கா அலுவலகம் செயல்பட்டு வருகின்றது அந்த அலுவலகத்திற்கு தினசரி வந்து செல்லும் பயனாளர்கள் நிற்பதற்கு நிழற்டையோ அல்லது அவர்கள் அமர்வதற்கு வசதியாக இருக்கைகளோ எதுவுமே கிடையாது அது மட்டுமல்ல அவசரத்திற்கு சிறுநீர் கழிக்க செல்வதென்றால் கூட அவர்களுக்கு கழிப்பிட வசதிகள் கூட அங்கு கிடையாது

இதற்கு மேலாக இந்த அலுவலகத்தை நோக்கி வரும் கிராமப்புற பயணிகள் பேருந்துக்காக காத்து நிற்பதற்கு நிழற்குடை கூட கிடையாது

இப்படி இல்லை இல்லை இல்லை என்பதே இந்த திராவிட மாடல் அரசுகளின் சாதனையாக இதனால் வரை தொடர்ந்து உள்ளது இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள தூய சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்கள் தொடர்ந்து அரசு மருத்துவமனை அம்மா உணவகங்கள் மற்றும் அரசு சார்ந்த துறைகளில் அதிரடி விசிட் செய்து நடவடிக்கைகள் எடுப்பது போலவே ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்திற்கும் அவர் அதிரடியாக விசிட் செய்து ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஸ்ரீரங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது களம் இறங்குவாரா ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *