புதிய இரயில்வே சேவைகள் வேண்டி துரை வைகோ எம்.பி கோரிக்கை

மாண்புமிகு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை இன்று (27.05.2026) நேரில் சந்தித்தேன்.

முதலில் நன்றி தெரிவித்தல்:

திருச்சி – திருப்பதி இடையிலான பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சேவைக்கான எனது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி, திருப்பதி – குண்டூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரயில் சேவையை திருச்சி வரை நீட்டித்து அறிவித்ததற்கும்,

திருச்சி – சார்லப்பள்ளி (Hyderabad) இடையிலான சிறப்பு இரயில் சேவையை நிரந்தர சேவையாக மாற்றியதற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.

இரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டி கோரிக்கை:

எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகவும், கீரனூர் – திருவெறும்பூர் இடையே முக்கிய இணைப்புப் பாதையாகவும், சுமார் 45 கிராமங்களுக்கான முக்கிய சந்திப்புப் பகுதியாகவும் விளங்கும் கீரனூர் LC No: 355இல் இரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மீண்டும் நினைவூட்டி கடிதம் வழங்கினேன்.

இரயில் நிலையங்களில் நிறுத்தம் வேண்டி கோரிக்கை:

பின்வரும் இரயில்களுக்கு நிறுத்தம் வழங்கிடக் கோரினேன்:

  1. திருச்சி – மயிலாடுதுறை MEMU விரைவு இரயில் (16833/34) மற்றும் எர்ணாகுளம் – காரைக்கால் விரைவு இரயில் (16187/88) ஆகியவற்றுக்கு திருவெறும்பூர் (TRB) இரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்றும்,
  2. மைசூரு – கடலூர் துறைமுக விரைவு இரயில் (16231/16232) பெட்டவாய்த்தலை இரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்றும் உரிய காரணங்களுடன் கோரிக்கை வைத்தேன்.
  3. போட் மெயில் எக்ஸ்பிரஸ் (16751/16752) இரயிலுக்கு கீரனூர் இரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கிட வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தேன்.

புதிய இரயில் சேவைகள் வேண்டி கோரிக்கை:

  1. திருச்சியிலிருந்து கர்நாடக மாநிலம் சாமராஜநகர் வரை இரவு நேர விரைவு இரயில் சேவை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும்,
  2. திருச்சி – புதுக்கோட்டை – காரைக்குடி – அருப்புக்கோட்டை வழியாக திருச்செந்தூர் வரை தினசரி பகல் நேர இன்டர்சிட்டி விரைவு இரயில் சேவை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும்,
  3. தற்போது ஒற்றை மின்சாரப் பாதையாக இயங்கும் திருச்சி – கரூர் இரயில் பாதையை இரட்டைப் பாதையாக மாற்றும் திட்டத்திற்கு விரைவான அனுமதி வழங்கி, பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து கடிதம் கொடுத்தேன்.

விஷன் 2030 திட்டத்தில் திருச்சியைச் சேர்க்கும் கோரிக்கை:

2030-க்குள் 48 முக்கிய நகரங்களில் இரயில் புறப்படும் திறனை இரட்டிப்பாக்கும் விஷன் 2030 திட்டத்தில் திருச்சியைச் சேர்க்க வேண்டும் என்று அதன் முக்கியத்துவத்தை விளக்கி கோரிக்கை வைத்தேன்.

எனது நன்றியை அன்புடன் ஏற்றுக்கொண்ட அமைச்சர் அவர்கள், எனது அனைத்து கோரிக்கைகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்து, வழங்கிய கோரிக்கைக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டு, அவை அனைத்தையும் உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
27.05.2026
புதுடெல்லி

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் ‘சத்தம் இல்லாத சக்கர வியூகம்’

    அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் ‘சத்தம் இல்லாத சக்கர வியூகம்’₹180 கோடி சிவன் சொத்தை மீட்க அதிரடி களப்பணி தொடக்கம்!அதிர்ச்சியில் அதிகார வர்க்கம், ஆடிப்போன அஸ்திவாரம்.திருடனுக்கு தேள் இல்லை இல்லை  நட்டுவாக்கிளி கொட்டியுள்ளது. பல தசாப்தங்களாகத் திட்டமிட்டுத் திருடப்பட்டுக் கொண்டிருந்த திருவரங்கம் வட்டம்,…

    சிவன் சொத்து குல நாசம் – ஏய்ப்பவர்கள் ஈசனின் நெற்றிக்கண் திறப்பில் சாம்பலாவது உறுதி. – மந்திரியால் என்ன செய்ய இயலும் என ஆணவமாக பேசுபவரின் அகம்பாவத்தை ஈசன் அடக்குவான்

    ராஜகோபுர ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடங்கிதிருப்பராய்த்துறை சிவன் திருக்கோயில் மேம்பாட்டிற்கு 16 அம்ச கோரிக்கை“கோயில் காக்க… கொள்கை வகுக்க… பக்தர் வாழ… பாரம்பரியம் நிலைக்க…” “தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” – திருவாசகம். ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ மற்றும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *