தமிழ்நாட்டில் இப்படி நடக்குமா, முதல்வரே இங்கேயும் இதைப்போல எதிர்பார்க்கிறோம்

விஜிலன்ஸை பார்த்ததும் கதவை பூட்டினார்… அடுத்த நொடி கூரையை உடைத்து இரண்டாம் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்ற டிஎஸ்பி! சுவரை தாண்டி ஓடிய அவரை நடுரோட்டில் விரட்டிப்பிடித்த விஜிலன்ஸ் அதிகாரிகள் — லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியபோது சேர்த்தலா டிஎஸ்பி டி. அனில்குமார் சிக்கிய அதிரடி சம்பவம்!

லஞ்சம் வாங்கிக்கொண்டிருந்த போது சேர்த்தலா டிஎஸ்பி டி. அனில்குமாரை விஜிலன்ஸ் அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். ஊழலற்ற கேரளாவை உருவாக்கும் நோக்கில் ‘ப்ராஜெக்ட் ஸீரோ’ திட்டத்தில் நடத்தப்பட்ட ரகசிய நடவடிக்கையில்தான் இந்த பரபரப்பான கைது நடந்துள்ளது.

போலீசார் பறிமுதல் செய்த கழிவுநீர் அகற்றும் வாகனத்தை சட்ட நடவடிக்கைகள் இன்றி விடுவிக்க ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் டிஎஸ்பி தலைமையிலான போலீஸ் குழு இந்த வாகனங்களை பறிமுதல் செய்திருந்தது. பின்னர் வாகன உரிமையாளரிடம் பெரும் தொகை லஞ்சம் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தனை பெரிய தொகையை கொடுக்க தயங்கிய வாகன உரிமையாளர் உடனடியாக ஆலப்புழா விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து விஜிலன்ஸ் டிஎஸ்பி கே.வி. பென்னி தலைமையிலான சிறப்பு குழு அனில்குமாரின் அசைவுகளை ரகசியமாக கண்காணித்து வந்தது.

லஞ்சத் தொகையின் முதல் கட்டமாக ரூ.50,000-ஐ தனது சேர்த்தலா ஆலுங்கல் பகுதியில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரும்படி டிஎஸ்பி கூறியிருந்தார். அதன்படி பணம் கொடுக்க வந்த வாகன உரிமையாளரை விஜிலன்ஸ் அதிகாரிகள் ரகசியமாக பின்தொடர்ந்தனர்.

மாலை நேரத்தில் வீட்டில் வைத்து பணத்தை வாங்கிக்கொண்டிருந்தபோது விஜிலன்ஸ் அதிகாரிகள் வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால் அதிகாரிகள் வருவதை தொலைவிலிருந்தே கவனித்த அனில்குமார், கையில் இருந்த பணத்துடன் வீட்டுக்குள் ஓடி கதவை பூட்டிக்கொண்டார்.

அதன் பின்னர் சினிமாவையே மிஞ்சும் காட்சிகள் அங்கே அரங்கேறின. வீட்டின் இரண்டாம் மாடி கூரையை உடைத்து கீழே குதித்து, சுவரை தாண்டி தப்பிக்க முயன்றார். ஆனால் தயார் நிலையில் இருந்த விஜிலன்ஸ் குழு அவரை விரட்டிப்பிடித்து கைது செய்தது.

கொல்லத்தைச் சேர்ந்த அனில்குமார், கடந்த உள்ளாட்சி தேர்தல் காலத்தில்தான் சேர்த்தலாவில் டிஎஸ்பியாக பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதிலிருந்து இவர்மீது பல லஞ்ச புகார்கள் இருந்ததாக விஜிலன்ஸ் தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் ‘ப்ராஜெக்ட் ஸீரோ’ நடவடிக்கையின் கீழ் ஊழல் அதிகாரிகளை கண்காணித்து வரும் நிலையில், உயர்பதவியில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி இப்படியாக நாடகீயமாக சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    லஞ்ச ரேட் லிஸ்ட்- திருப்பராய்த்துறை மின்சார வாரிய அலுவலகம்.தரிகெட்டு ஓடும் புரோக்கர்கள் – கதறவிடும் கார்த்திகேயன் -AE – ஆதாரங்களைத்தருகிறோம் ஆக்‌ஷனில் இறங்குவாரா அமைச்சர் நிர்மல்குமார்?

    தமிழக முதல்வராக திரு ஜோசப் விஜய் பதவி ஏற்றவுடன் லஞ்சம் வாங்கும் ஊழல் அதிகாரிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது. இதனால் லஞ்சம் முற்றிலும் மறையத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று வாரத்தில் மட்டும் திருப்பராய்த்துறையில் தற்காலிக உதவி மின் பொறியாளராக…

    திருப்பராய்த்துறை சிவன் கோயில் செயல் அலுவலர் பிரபாகரனைக் கண்டு கொலை நடுங்கும் ராமகிருஷ்ண தபோவன சுவாமிகள். காரணம் என்ன? அதிர்ச்சி ரிப்போர்ட். ராமகிருஷ்ண தபோவன ஃபைல்ஸ் 1/22 , உபயம்:RTI

    திருவாசகம்:”நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!” திருப்பராய்த்துறை திருக்கோயிலில் பல ஆண்டுகளாக திட்டமிட்டு பதுக்கப்பட்டிருந்த, அமைதியாக கிடந்த கோப்புகள், ஒரு அதிகாரியின் வருகையால் உயிர் பெற்றதாகக் கூறப்படுகிறது. செயல் அலுவலர் பிரபாகரன் பொறுப்பேற்ற…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *