ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை கஞ்சா அராஜகம் குறையவில்லை

முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல்

ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் பசீர் அகமது மகன் ஹாஜா முகைதீன் (38), இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியின் (நீயூஸ் ஜெ) செய்தியாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் செய்தி பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு தூக்கி கொண்டு இருந்தார், அப்போது நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதாகி விடுதலையில் வந்திருந்த சலீம் மகன் அப்துல் பாசித் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு கும்பல் ஹாஜா முகைதீன் வீட்டுக்கு சென்று கதவைத் தட்டி உள்ளனர் அப்பொழுது அவரது மாமியார் கதவை திறந்த போது ஹாஜா மைதீனிடம் பேச வேண்டும் என்று அந்த கும்பல் கூறியுள்ளது உடனே வீட்டுக்குள் இருந்த ஹாஜா முகைதீன் வீட்டு வாசல் கேட்டு உள்ளே சென்று என்னா தம்பி என்று கேட்ட பொழுது அப்துல் பாசித் தன்னை கோவிலூரை சேர்ந்த ஒருவர் தாக்கி விட்டதாகவும் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தபோது போலீசார் புகார் ஏற்கவில்லை என்றும் நீங்கள் வந்து சொல்லுங்கள் என்று கூறியுள்ளார் உடனே கதவைத் திறந்த ஹாஜா முகைதீன் வெளியில் வந்துமேலும் இது குறித்து கேட்டு பேசிக் கொண்டிருக்கும் போது அப்துல் பாசித் இடுப்பில் சொருகி வைத்திருந்த பாட்டிலால் தலையில் அடித்து மேலும் தலை நெஞ்சு உள்ளிட்ட உடலில் பல பகுதியில் பாட்டிலால் அந்த கஞ்சா கும்பல் குத்தி காயப்படுத்தியதுடன் அவரின் செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளது, இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் ஹாஜா முகைதீன் தற்பொழுது தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த நிலையில் நள்ளிரவு துணைச்சலாக கஞ்சா கும்பலை ஒரு பத்திரிக்கையாளரை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    லஞ்ச ரேட் லிஸ்ட்- திருப்பராய்த்துறை மின்சார வாரிய அலுவலகம்.தரிகெட்டு ஓடும் புரோக்கர்கள் – கதறவிடும் கார்த்திகேயன் -AE – ஆதாரங்களைத்தருகிறோம் ஆக்‌ஷனில் இறங்குவாரா அமைச்சர் நிர்மல்குமார்?

    தமிழக முதல்வராக திரு ஜோசப் விஜய் பதவி ஏற்றவுடன் லஞ்சம் வாங்கும் ஊழல் அதிகாரிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது. இதனால் லஞ்சம் முற்றிலும் மறையத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று வாரத்தில் மட்டும் திருப்பராய்த்துறையில் தற்காலிக உதவி மின் பொறியாளராக…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *