திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கைகளை முன் வைத்த துரை வைகோ எம்.பி

இன்று (29.05.2026) மாலை 4.30 மணி அளவில் திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி மக்களின் சார்பில் பல்வேறு முக்கிய ரயில்வே கோரிக்கைகளை முன்வைத்தேன்.

முதலில், எனது நீண்டநாள் கோரிக்கைகளான திருச்சி – சார்லப்பள்ளி ரயிலை நிரந்தர விரைவு ரயிலாக மாற்றியதற்கும், திருச்சி – திருப்பதி இடையே பகல் நேர ரயில் சேவையை அறிமுகப்படுத்தியதற்கும் ரயில்வே நிர்வாகத்திற்கும், திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.

மேலும், கடந்த சந்திப்பின்போது திருச்சி – மயிலாடுதுறை MEMU ரயிலுக்கு திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்குவது சாத்தியமான கோரிக்கை என்றும், அதனை சாதகமாக பரிசீலிக்கலாம் என்றும் ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்திருந்ததை நினைவூட்டி, அக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினேன். இதுகுறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சரிடமும் தனியாக கோரிக்கை அளித்திருப்பதாக தெரிவித்தேன்.

இச்சந்திப்பின்போது புதிய கோரிக்கைகளாக, திருச்சி ரயில் நிலையத்திலிருந்து புதிய ஷட்டில் ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவது, தேஜஸ் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22672) மற்றும் செம்மொழி எக்ஸ்பிரஸ் (16615) ரயில்களில் திருச்சிக்கு கூடுதல் பயணிகள் ஒதுக்கீடு (Quota) வழங்குவது தொடர்பாக வலியுறுத்தினேன்.

அதேபோல், திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பெட்டி நிலை குறியீட்டு பலகைகள் (Coach Indication Boards) அமைத்தல், 8 வது நடைமேடையில் குடிநீர் வசதியை மீண்டும் செயல்படுத்துதல் மற்றும் நீண்டகாலமாக நடைபெற்று வரும் எஸ்கலேட்டர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவருதல் ஆகிய கோரிக்கைகளையும் முன்வைத்தேன்.

எனது கோரிக்கைகளை கவனமாகக் கேட்டுக் கொண்ட திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அவர்கள் எஸ்கேலேட்டர் பணிகள் ஜூலை மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும் 8வது நடைமேடையில் விரைவில் குடிநீர் வசதியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாகவும் பெட்டி நிலை குறியீட்டு பலகைகள் (Coach Indication Boards) முழுமையாக சரி செய்யப்பட்டு வருகின்ற ஜூலை இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும், மற்ற கோரிக்கைகளையும் உரிய முறையில் பரிசீலித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

திருச்சி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற தொடர்ந்து பாடுபடுவேன்.

அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
29.05.2026

#MDMK #trichy #DuraiVaiko #SouthernRailways

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சியில் கிரடாய் பேர்புரோ கண்காட்சி; அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார் – 48 அரங்குகளில் வீடுகள், மனைகள் காட்சிப்படுத்தல்!

    திருச்சியில் கிரடாய் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பான பேர்புரோ – 2026 விற்பனை கண்காட்சி இன்று தொடங்கியது. திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி, நாளை மறுநாள் வரை தொடர்ந்து 3…

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *