புளியஞ்சோலை சுற்றுலாத்தலமா அல்லது பணம் பிடுங்கும் இடமா துறையூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு அரசு துணை சபாநாயகர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பாரா?

🚨 புளியஞ்சோலை சுற்றுலா பகுதியில் அதிக கட்டண குத்தகை ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை.

📍 இடம்: பச்சபெருமாள்பட்டி ஊராட்சி, உப்பிலியபுரம் ஒன்றியம், துறையூர், திருச்சி மாவட்டம்.

⚠️ முக்கிய பிரச்சனைகள்:
❌ போதுமான இருசக்கர / நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் இல்லை
❌ Entry Fee / Vehicle Fee குறித்த தெளிவான அறிவிப்பு பலகைகள் இல்லை
❌ குடிநீர், கழிப்பிடம், மின்விளக்கு, பாதுகாப்பு வசதிகள் போதுமானதாக இல்லை
❌ சாலையோர வாகன நிறுத்தத்தால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமப்படுகின்றனர்
❌ புளியஞ்சோலை ஆற்றுக்கு சென்று வர சுற்றுலா பயணிகளுக்கு போதிய வசதிகள் இல்லை
❌ பேவர் பிளாக் பாதைகள் ரோட்டு கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன

📌 2023-ஆம் ஆண்டிலேயே இதுகுறித்து மனுக்கள் அளிக்கப்பட்டும், இதுவரை நிலையான தீர்வு ஏற்படுத்தப்படவில்லை.

🛑 எனவே, இன்று (29-05-2026) நடைபெற உள்ள குத்தகை ஏலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, முதலில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான உரிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்ட பின் மட்டுமே ஏலத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

🙏 தமிழ்நாடு அரசு, திருச்சி மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

📢 கோரிக்கை வைக்கும் குழுக்கள்:
🔹 புளியஞ்சோலை சுற்றுலா மேம்பாட்டு குழு
🔹 சாலை பயனீட்டாளர்கள் நல குழு – திருச்சி

புளியஞ்சோலை #Puliyancholai #திருச்சி #TamilNadu #Tourism #PublicIssue #ParkingFacility #EntryFee #சுற்றுலாமேம்பாட்டுகுழு #சாலைபயனீட்டாளர்கள்நல_குழு

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சியில் கிரடாய் பேர்புரோ கண்காட்சி; அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார் – 48 அரங்குகளில் வீடுகள், மனைகள் காட்சிப்படுத்தல்!

    திருச்சியில் கிரடாய் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பான பேர்புரோ – 2026 விற்பனை கண்காட்சி இன்று தொடங்கியது. திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி, நாளை மறுநாள் வரை தொடர்ந்து 3…

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *