பெண் அதிகாரிக்குக் கூட கழிப்பிட வசதி இல்லாத அவலம்!காகிதத்தில் ‘தூய்மை’… காவிரிக்கரையோரம் ‘அவலம்’!திருப்பராய்த்துறை ஊராட்சியின் போலி விளம்பர முகமூடியைக் கிழிக்கும் பொதுமக்கள்!

“ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு” என்றார் வள்ளுவர்.

ஆனால், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை ஊராட்சியிலோ, பேரறிவும் இல்லை; பெருந்தன்மையும் இல்லை; பெயரளவிற்கே நிர்வாகம் நடக்கிறது என்பதற்கு சான்றாக நிற்கிறது அங்குள்ள ஒரு போலி விளம்பரப் பலகை.

பத்தாண்டுகளுக்கு முன்பே திருச்சி மாவட்டம் “திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டம்” என்று தம்பட்டம் அடித்துக் கொண்டது. அதன் உச்சக்கட்டக் கூத்தாக, திருப்பராய்த்துறை ரயில்வே கேட் அருகே “திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சி” என்றொரு பதாகை, ஊராரை ஏளனம் செய்வது போல கம்பீரமாய் நிற்கிறது. ‘பேருபெத்த பேரு… நீரிலேது நீறு’ என்ற பழமொழிக்கு ஏற்ப, காகிதத்தில் சொர்க்கம் காட்டும் இந்த ஊராட்சி நிர்வாகத்தின் நிஜ முகம், நந்தவனம் மற்றும் அம்பேத்கர் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதிகளில் வாழும் மக்களின் கண்ணீரில் மிதக்கிறது.

16 ஆண்டுகால வனவாசம்! நந்தவனத்திற்கு நீதி வேண்டும்!?
மக்களாட்சி தத்துவத்தின் மாண்புகளான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 (சமத்துவம்), பிரிவு 21 (வாழும் உரிமை) ஆகியவற்றை இந்த ஊராட்சி நிர்வாகம் கடந்த 16 ஆண்டுகாலமாக காலில் போட்டு மிதித்து வருகிறது. நந்தவனம் பகுதியில் 35 குடும்பங்கள், அம்பேத்கர் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் 15 குடும்பங்கள் என 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள், விடிந்தால் எங்கே போவது என்று திகைத்து நிற்கும் அவலம் தொடர்கிறது.

காவிரித் தாய் கரைபுரண்டு ஓடும் புண்ணிய பூமியில், நம் வீட்டுப் பெண்களும், முதியவர்களும் தங்களின் இயற்கை உபாதைகளைக் கழிக்க விடியற்காலையிலேயே காவிரிக்கரைக்கும், ரயில்வே தண்டவாளங்களுக்கும் ஓட வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. ‘மானமே உயிர்’ என வாழும் தமிழ் மண்ணில், நம் வீட்டுப் பெண்களின் தார்மீக உரிமையைப் பறித்துவிட்டு, வீதியில் “தூய்மை ஊராட்சி” என்று போலிப் பலகை வைப்பதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்? இதெல்லாம் ஒரு பொழப்பா? மானங்கெட்ட பொழப்பு என்று மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

“காவேரி கரைபுரண்டு ஓடினாலும் மக்களுக்குக் குடிக்கக் காவிரி நீர் கிடையாது. கோயில் நிலத்தை விற்று, காடுகளை அழித்து, வாய்க்காலைக் கழிவுநீர் ஓடையாக மாற்றியதைத் தவிர இந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் செய்த சாதனை என்ன?” பொதுமக்கள் கேள்வி.

பெண் அதிகாரிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத அவலம்!
ஊராட்சியின் லட்சணம் இத்துடன் முடியவில்லை. அரசாங்கத்தின் முகமாக விளங்கும் கிராம நிர்வாக அதிகாரிக்கு (VAO) கூட ஒரு கழிப்பிட வசதியை இந்த நிர்வாகம் செய்து தரவில்லை. தற்போது அங்குப் பணிபுரியும் ஒரு பெண் அதிகாரி, அடிப்படை வசதி கூட இல்லாத கட்டிடத்தில் அமர்ந்து மக்களின் குறைகளைக் கேட்க வேண்டிய துரதிர்ஷ்ட நிலை உள்ளது.

தன் சொந்தப் பணியாளரான ஒரு பெண் அதிகாரியின் அத்தியாவசியத் தேவையைக் கூட உணராத இந்த நிர்வாகம், எப்படிப் பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும்? பெற்ற தாயையும், பிறந்த சகோதரியையும் மதிக்கும் எவனுக்கும் ஒரு பெண்ணின் இந்தத் துயரம் நெஞ்சை உலுக்கும். ஆனால், இந்த அதிகார வர்க்கத்தின் நெஞ்சம் கல்லாய் இறுகிப் போய்விட்டது.

பொதுமக்களின் அதிரடிப் பிரகடனம் — போர்க்காலக் கோரிக்கைகள்:
போலி முகமூடியைக் கிழிப்போம்: திருப்பராய்த்துறை ரயில்வே கேட் அருகே வைக்கப்பட்டுள்ள போலித் தகவல் பலகையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மக்களை ஏமாற்றிய அதிகாரிகள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போர்க்காலக் கழிப்பிட வசதி: நந்தவனம் மற்றும் அம்பேத்கர் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதி மக்களுக்கு உடனடியாகத் தனிநபர் கழிப்பிடங்களோ அல்லது முறையான சமூகக் கழிப்பிடங்களோ அமைத்துத் தரப்பட வேண்டும்.
அலுவலகத்தை மாற்றுங்கள்: பெண் கிராம நிர்வாக அதிகாரிக்குக் கழிப்பிட வசதியுடன் கூடிய ஒரு வாடகை வீட்டை எடுத்து உடனடியாக அலுவலகமாக மாற்ற வேண்டும். இல்லையெனில், எந்த ஊரில் கழிப்பிட வசதி இருக்கிறதோ, அந்த ஊருக்கு இந்த VAO அலுவலகத்தை மாற்றிவிடுங்கள், நாங்களே அங்கு வந்து அதிகாரியைப் பார்த்துக் கொள்கிறோம்!

அதிகார வர்க்கத்தின் போலி விளம்பரங்களுக்குப் பொதுமக்களின் சாட்டையடிப் பதில் இது. இனியாவது தூங்கும் அரசு விழித்துக் கொள்ளுமா? அல்லது மக்களின் பொறுமை எல்லையைக் கடந்து புரட்சியாக வெடிக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *