அமைச்சர் ரமேஷின் அதிரடி வேட்டை ஆரம்பம் – ஆட்டம் காணும் அதிகார வர்க்கங்கள்

சாணக்கிய சக்கர வியூகத்தில் அறநிலையத்துறை அமைச்சர்! ஆட்டம் காணும் அதிகாரவர்க்கம்!
“புலி எட்டடி பாய்ந்தால், குட்டி புலி பதினாறு அடி பாய்ந்திருக்கிறது!”

அறநிலையத்துறை திருச்சி மண்டலத்தில் சத்தமே இல்லாமல் ஒரு பிரம்மாண்ட ‘யுத்தம்’ அரங்கேறி முடிந்துள்ளது. கோவில் சொத்துக்களைச் சூறையாடிய தில்லாலங்கடிகளுக்குச் சிம்மசொப்பனமாக, திருச்சியில் புதிய கூடுதல் ஆணையர் -IAS பணியிடம் உருவாக்கப்பட்டு, அதிரடி அதிகாரியாக பொன்மணி ஐ.ஏ.எஸ். களமிறக்கப்பட்டுள்ளார்.

அறநிலையத்துறை அமைச்சர் தன் ‘சதுரங்க சேனைகள்’ மூலம் வகுத்த சக்கர வியூகத்தால், பல நூறு கோடி மதிப்புள்ள ஆன்மீகச் சொத்துக்கள் மீட்கப்படுவது இப்போது நூறு சதவீதம் நிச்சயமாகிவிட்டது!

பின்னணி என்ன? இரண்டு சகாப்த கால அரசியல் சதி!
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பழனி, திருச்செந்தூர் போன்ற பெரும் வருவாய் உள்ள கோவில்களை நிர்வகிக்க, நேர்மையான ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருந்தால் அரசியல்வாதிகள் ‘கொள்ளையடிக்க’ முடியாது என்பதால், கடந்த காலங்களில் அந்தப் பணியிடங்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டன. தற்போது அந்தத் தடையை உடைத்தெறிந்து, திருச்சியைத் தொடர்ந்து மேலும் 4 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கூடுதல் ஆணையர்களாக நியமிக்க அமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் முதல் புள்ளிதான் திருச்சியில் விழுந்திருக்கிறது!

திருப்பராய்த்துறை சிவன் கோவில்: ₹500 கோடி சொத்து கொள்ளை?
அமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே அரங்கேறி வரும் அக்கிரமங்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன:

போலி பட்டா விவகாரம்: திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனம் என்ற தனியார் அறக்கட்டளை, சிவன் கோவிலுக்குச் சொந்தமான 500 கோடி மதிப்பிலான சொத்துக்களைத் தன் பெயருக்குப் பட்டா மாற்றி வைத்துள்ளது.
அடிமனை வாடகை ஏய்ப்பு: கடந்த 16 வருடங்களாக நந்தவனம் பகுதியில் மக்கள் எந்தவொரு அடிப்படை வசதியும் இன்றி தவித்து வரும் வேளையில், இந்த அறக்கட்டளையினர் அரசுக்குச் செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான அடிமனை வாடகையை பைசா பைசாவாக ஏய்ப்பு செய்து வந்துள்ளனர்.
மண்டப ஆக்கிரமிப்பு: இந்த கல்வியாண்டில், கோவிலுக்கு வெளியே இயங்கி வந்த ‘நரேந்திர வித்யாலயா’ பள்ளியை, கோவிலுக்குள் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றுக்கால் மண்டபத்திற்குள் அராஜகமாக மாற்றியுள்ளனர்.

துரோகத்தின் பின்னணி: இந்த அக்கிரமத்திற்கு, கோவிலின் செயல் அலுவலர் பிரபாகரன் மற்றும் ஆய்வாளர் கோகிலா ஆகியோரை மிரட்டி பணிய வைத்துள்ளனர். இவர்களுக்குச் சென்னையில் அறநிலையத்துறையிலேயே உயர் பதவியில் உட்கார்ந்து கொண்டு, ராமகிருஷ்ண தபோவனத்திற்கு ‘கைக்கூலியாக’ வேலை பார்க்கும் கூடுதல் ஆணையர்கள் கல்யாணி மற்றும் ஜெயராமன் ஆகியோர் முழு உடந்தையாக இருந்தது அம்பலமாகியுள்ளது! ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் தடுத்து, போலி பட்டாக்களைக் காப்பாற்றியதே இந்தச் சென்னை அதிகாரிகள்தான் என அறநிலையத்துறை வட்டாரங்கள் குமுறுகின்றன.

“சிவன் சொத்து சிவனுக்கே!” – அமைச்சரின் சபதம்!
தன் துறையிலேயே இருந்து கொண்டு துரோகம் செய்த ‘கருப்பு ஆடுகளை’ தனது உளவுப் படை (சதுரங்க சேனைகள்) மூலம் வேட்டையாடி, மொத்த ஆவணங்களையும் திரட்டி விட்டார் அமைச்சர். இப்போது காய் நகர்த்தல் ஆரம்பமாகிவிட்டது.

அமைச்சரின் அதிரடி வட்டாரங்களில் இருந்து கசிந்த தகவல் இதுதான்:
“கோவில் சொத்துக்களில் ஒரு இன்ச் கூட யாராலும் திருட முடியாது! எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய செல்வாக்கு படைத்த ஆன்மீகச் சக்தியாக இருந்தாலும் சரி, அந்த சிவபெருமானையே துணைக்கு அழைத்து வந்தாலும்… சிவன் கோவில் நிலம் மீட்கப்படுவது உறுதி!”

அமைச்சரின் 5 அம்ச இலக்கு:

  1. கோவில் சொத்துக்களைப் பாதுகாப்பது.
  2. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை முழுமையாக மீட்பது.
  3. பக்தர்களுக்குச் சுமுகமான தரிசன வசதிகளை ஏற்படுத்துவது.
  4. திருக்கோவில் வருமானத்தைப் பெருக்கி, முறையான பராமரிப்பு செய்வது.
  5. கோவில் வருவாய் மூலம் ஏழைகளுக்குக் கல்வி, மருத்துவ உதவிகளை வழங்குவது.

ஸ்ரீரங்கத்தின் அடிமனைப் பிரச்சனை முதல் திருப்பராய்த்துறை ஆக்கிரமிப்பு வரை, மொத்தக் கும்பலையும் வேரறுக்கப் புறப்பட்டுவிட்டது அமைச்சரின் சாணக்கியப் படை. “அடுத்த ஆப்பு யாருக்கு?” என்ற ஆவலுடன் சிவனடியார்களும், பொதுமக்களும் அமைச்சரின் அடுத்த நகர்வை நோக்கிப் கண் இமைக்காமல் காத்திருக்கிறார்கள்! மாற்றம் நிச்சயம் வரும்… சிவன் சொத்து சிவனுக்கே சேரும்!

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    பெண் அதிகாரிக்குக் கூட கழிப்பிட வசதி இல்லாத அவலம்!காகிதத்தில் ‘தூய்மை’… காவிரிக்கரையோரம் ‘அவலம்’!திருப்பராய்த்துறை ஊராட்சியின் போலி விளம்பர முகமூடியைக் கிழிக்கும் பொதுமக்கள்!

    “ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு” என்றார் வள்ளுவர். ஆனால், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை ஊராட்சியிலோ, பேரறிவும் இல்லை; பெருந்தன்மையும் இல்லை; பெயரளவிற்கே நிர்வாகம் நடக்கிறது என்பதற்கு சான்றாக நிற்கிறது அங்குள்ள ஒரு போலி விளம்பரப்…

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *