
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் தெற்கு தேவி தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான சுமார் 17 ஏக்கர் நஞ்சை நிலத்தை பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் விலைக்கு வாங்கி அங்கு வில்லா அமைக்க திட்டமிட்டு இருந்தது அதை எதிர்த்து பல ஆண்டுகளாக அந்த தோப்பில் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் பாஜக பிரமுகர் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற முயற்சி செய்து கொண்டிருந்தார் இந்த நிலையில் இந்த செய்தியை முதன் முதலாக நமது நியூ திருச்சி டைம்ஸ் தான் செய்தியாக வெளியிட்டிருந்தது அதன் தொடர்ச்சியாக இன்று நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற்ற கோவிந்தன் ஜி ஸ்கொயர் இன் ஸ்ரீரங்கத்தின் கனவினை தற்காலிகமாக தடுத்திருக்கின்றார் இது சாமானியனுக்கு கிடைத்த நீதி என்றும் என்றென்றும் நீதிமன்றமும் நீதி அரசர்களும் உண்மையின் பக்கம் தான் இருப்பார்கள் என்பது ஊர்ஜினமாக ஆகி உள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் மற்ற ஊடகங்கள் எல்லாம் இதை செய்தியாக முன் வராத சூழலில் நமது நியூ திருச்சி டைம்ஸ் உறுதியோடும் ஊடக தர்மத்தின் படியும் செய்தி வெளியிட்டு உண்மை தன்மையை உலகறிய செய்ததற்கு அவர் நமக்கு நன்றி கூறினார்
