காவேரி மருத்துவமனை திருச்சி, 11-வது காவேரி மராத்தான் போட்டிக்கான பிரத்தியேக ஜெர்சி மற்றும் பதக்கங்களை அறிமுகப்படுத்தியது!


• ’உலக இதய தினம் – 2026’-ஐ முன்னிட்டு ‘உங்களது ஆரோக்கியமான இதயத்திற்காக ஓடுங்கள்’ (Run for your Healthy Heart) என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்த மாரத்தான் நடைபெறவுள்ளது.

திருச்சி, 24 செப்டம்பர் 2026: இந்தியாவின் முன்னணி மருத்துவமனை குழுமத்தைச் சேர்ந்த திருச்சி காவேரி மருத்துவமனை (Kauvery Hospital Trichy), ‘உலக இதய தினத்தை’ முன்னிட்டு ‘உங்களது ஆரோக்கியமான இதயத்திற்காக ஓடுங்கள்’ (Run for your Healthy Heart) என்ற கருப்பொருளில் மாபெரும் மாரத்தான் ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. ‘காவேரி மாரத்தான் திருச்சி’ என்ற பெயரில் நடைபெறவிருக்கும் இந்த மாரத்தான் ஓட்டத்தின் 11-வது பதிப்பு (11th edition of Kauvery Marathon Trichy) 2026 செப்டம்பர் 27 அன்று நடைபெறவுள்ளது.
இந்த மாரத்தான் ஓட்டத்திற்கான அதிகாரப்பூர்வ ஜெர்சி மற்றும் பதக்கங்களை, காவேரி மருத்துவமனை திருச்சி இன்று அறிமுகப்படுத்தியது. செப்டம்பர் 29 அன்று கடைப்பிடிக்கப்படும் ‘உலக இதய தினத்தை’ முன்னிட்டு, இந்த மாபெரும் மாரத்தான் ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பங்கேற்பாளர்களின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் அடையாள அட்டை (Bib) விநியோகம் 2026 செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில், காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை, திருச்சி கண்டோன்மென்ட்டில் உள்ள காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட் (Kauvery Cancer Institute) வளாகத்தில் நடைபெறும். மாரத்தானில் பங்கேற்பவர்கள் தங்களுக்குரிய அடையாள அட்டைகளைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் தவறாமல் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து வயதுடையவர்கள் மற்றும் பல்வேறு உடற்தகுதி நிலைகளைக் கொண்டவர்களை ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வாக இருக்குமென எதிர்பார்க்கப்படும் இந்த மாரத்தான், அன்றாட உடற்பயிற்சியின் அவசியத்தையும் இதய நலனை முன்கூட்டியே தற்காத்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் நடைபெறுகிறது.

புகைப்படத்தில் (இடமிருந்து வலம்): திரு. பி. ஜெயக்குமார் – பொது மேலாளர் (செயல்பாடுகள்), காவேரி மருத்துவமனை, தென்னூர், திரு. ஜோசப் பிரான்சிஸ் ஏ – நிர்வாக இயக்குநர், எல்ஏ சினிமாஸ், திரு. கே. ஆர். சுரேஷ் – நிர்வாக இயக்குநர், கேஆர் டிரான்ஸ் ஃபியூயல்ஸ், டாக்டர் டி. செங்குட்டுவன் – இணை நிறுவனர் & நிர்வாக இயக்குநர், காவேரி குழும மருத்துவமனைகள், திரு. ஆண்ட்ரோஸ் நித்தியதாஸ் – மூத்த பொது மேலாளர், காவேரி ஹார்ட் சிட்டி, டாக்டர் செந்தில் வேல்முருகன் – மண்டல மருத்துவ இயக்குநர், காவேரி மருத்துவமனை, திருச்சி, திரு. அன்புச்செழியன் ஆர் – ஃபெசிலிட்டி டைரக்டர், காவேரி மருத்துவமனை, திருச்சி.
காவேரி மருத்துவமனை பற்றி (About Kauvery Hospital):
காவேரி மருத்துவமனை, அதிநவீன மருத்துவ உள்கட்டமைப்பு, நோயாளிகளை மையமாகக் கொண்ட கனிவான சேவை மற்றும் ஆழ்ந்த மருத்துவ நிபுணத்துவம் ஆகியவற்றிற்குப் பெயர் பெற்ற இந்தியாவின் முன்னணி மல்டி-ஸ்பெஷாலிட்டி சுகாதார சேவை நிறுவனமாகும். இக்குழுமம் திருச்சி, சென்னை, சேலம், ஓசூர், திருநெல்வேலி மற்றும் பெங்களூரு ஆகிய 6 முக்கிய நகரங்களில் 12 மருத்துவமனைகளைக் கொண்ட வலுவான நெட்வொர்க்குடன் இயங்கி வருகிறது; மேலும் 11,000-க்கும் மேற்பட்ட மருத்துவத் துறையைச் சார்ந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து வரும் காவேரி மருத்துவமனை, புதுமையான சிகிச்சைகள், நேர்மறையான பலன்களை அளிக்கும் மருத்துவச் சிகிச்சை முடிவுகள் மற்றும் மருத்துவச் சேவைகளில் தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறையுடன் கவனம் செலுத்திவருகிறது. உயர்தரத்திலான இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ சிகிச்சைகளை (secondary and tertiary care) வழங்குவதில் காவேரி மருத்துவமனை குழுமம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம் அறிவிப்பு!…

    மக்களின் ஆசீர்வாதத்துடனும், நீதியின் மீது கொண்ட உறுதியான நம்பிக்கையுடனும், பல்வேறு சதி, தடைகள் மற்றும் ஒழுக்கமற்ற தலையீடுகளால் எங்களிடமிருந்து அநியாயமாக பறிக்கப்பட்டிருந்த எங்கள் நீண்டகால மருத்துவ சேவை மையத்தை, நாங்கள் மீண்டும் உரிமையுடன் கைப்பற்றி, அதே இடத்தில் எங்கள் மருத்துவ சேவையை…

    தமிழ்நாடு அரசியல்: சினிமாவை விட பெரிய திரைக்கதை

    இன்றைய தமிழ்நாடு அரசியல் ஒரு சாதாரண தேர்தல் போட்டி அல்ல. அது ஒரு பெரிய திரைக்கதை போல மாறியுள்ளது. சில நேரங்களில் அது IPL கிரிக்கெட்டைவிட பரபரப்பாகவும், சினிமாவைவிட ஆழமான கதையுடனும் இருக்கிறது.முன்னொரு காலத்தில் அரசியல் என்பது பொதுக்கூட்டங்கள், பேச்சுகள், மற்றும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *