திருச்சியில் கிரடாய் பேர்புரோ கண்காட்சி; அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார் – 48 அரங்குகளில் வீடுகள், மனைகள் காட்சிப்படுத்தல்!

திருச்சியில் கிரடாய் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பான பேர்புரோ – 2026 விற்பனை கண்காட்சி இன்று தொடங்கியது. திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி, நாளை மறுநாள் வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது.

கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார். மேலும் இந்த நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், திருச்சி கிரடாய் சேர்மன் மனோகரன், கிரடாய் தலைவர் நசுருதீன், செயலாளர் முகமது இப்ராஹிம், பொருளாளர் கார்த்திக், பேர்புரோ கண்காட்சி சேர்மன் இளமுருகன், கண்காட்சி செயலாளர் அலாவுதீன், தமிழ்நாடு கிரடாய் துணைத்தலைவர் கோபிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், ஸ்டேட் பேங்க் சென்னை சர்க்கிள் பொது மேலாளர் சஞ்சீவ் குமார், துணைப் பொது மேலாளர் சந்தீப் குமார் நாயக், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரி ராஜ்குமார், எச்டிஎப்சி வங்கி சார்பில் பாலமுரளி கிருஷ்ணன் சின்கா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இந்தக் கண்காட்சியில் கட்டுமானத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், உள் அலங்கார நிறுவனங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் விற்பனை நிறுவனங்கள் என மொத்தம் 48 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 32 கட்டுமான நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, எச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட வங்கிகளும் அரங்குகளை அமைத்துள்ளன.

வீடு வாங்க விரும்புவோருக்கு வீட்டுக் கடன் தொடர்பான தகவல்கள், நிதி ஆலோசனைகள் உள்ளிட்ட சேவைகளும் கண்காட்சியில் வழங்கப்படுகின்றன.

மேலும், ரூ.30 லட்சம் முதல் ரூ.6 கோடி வரையிலான தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டுமனைகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கட்டுமான நிறுவனங்கள் மற்றும் உள் அலங்கார நிறுவனங்கள் சார்பில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால், கண்காட்சிக்கு வரும் பொதுமக்களின் கவனத்தை அவை ஈர்த்துள்ளன.

நிகழ்ச்சியில் ஆலோசகர் ரவி, இணைச் செயலாளர் முருகானந்தம், பொருளாளர் கார்த்திக் உள்ளிட்ட கிரடாய் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *