
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் நவம்பர் 2-ஆம் தேதி திருச்சி விமான நிலையம் வருகை தரவுள்ளார். அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார்.
இதனையொட்டி பொதுப்பணித்துறை அமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளருமான என்.ஆனந்த் மற்றும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ், நகர்ப்புற வாரியத் தலைவர் கு.ப. கிருஷ்ணன் மற்றும் கு.ப.கி. சிரஞ்சீவி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியும் ஸ்ரீரங்கம் நகரின் பிரபல தொழிலதிபருமான மாரிமுத்து ஏற்பாட்டில், திருச்சி விமான நிலையம் தொடங்கி மாத்தூர் வரை செல்லும் பாதை முழுவதிலும் வண்ணமயமான, பிரம்மாண்டமான வரவேற்புப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
காண்போரின் விழிகளை வியக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்டப் பதாகைகளால், திருச்சி மாநகரமே தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது. முதலமைச்சரின் இந்த வருகை அப்பகுதி மக்களிடையேயும் கட்சித் தொண்டர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.








