இந்து தமிழ் நாளிதழ் திருச்சி தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் உயிரிழந்தார்

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் சாலை அண்ணா நகர் முல்லை தெருவைச் சேர்ந்த சதாசிவம்- ஜெயலட்சுமி தம்பதியரின் 2-வது மகன் கல்யாணம் (எ)
எஸ்.கல்யாண
சுந்தரம்( 50).
இவர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் செய்தியாளராக பணிபுரிந்து, பின்னர் திருச்சி மாவட்டத்தில் தினமணி மற்றும் இந்து தமிழ் திசை நாளிதழ்களில் தலைமை நிருபராக பணிபுரிந்தார்.
பத்திரிகை துறையில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தவர். தனது பணி காலத்தில் டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் பாசனம் மற்றும் விவசாயம் தொடர்பான முக்கிய செய்திகளை வெளியிட்டு விவசாயிகளின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்தவர்.
தற்போது இந்து தமிழ் திசை திருச்சி பதிப்பில் தலைமை நிருபராக பணியாற்றி வந்த நிலையில், சனிக்கிழமை(09-11-2024) இரவு 10:30 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் சாலை அண்ணா நகர் முல்லை தெருவில் உள்ள அவர்களது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை திங்கள் கிழமை (11-11-2024) காலை காலை 10 மணிக்கு மேல் இறுதி சடங்கு நடைபெறுகிறது.

அன்னாரை இழந்து வாடும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் நியூ திருச்சி டைம்ஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறோம்.

இறைவன்உறவுகளுக்கு மன வலிமையை தர இறைவனை ப்ரார்த்திக்கின்றோம்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *