
ஜனவரி 2025-இல் திருச்சி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்வின் துணைத் தலைவராக மாண்புமிகு அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு பாரத சாரணியர் இயக்கத்தின் தலைவர் மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் துணைத்தலைவருக்கான Scarf அணிவித்து சிறப்பித்தார்

தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களின் தலைமையில் பெருந்திரளணி தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெருந்திரளனி பொறுப்பாளர் திரு.அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் திரு.நரேஷ், மாவட்ட ஆட்சியர் திரு.பிரதீப் குமார் ஆகியோரும் உயர் காவல் அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.
