

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் முகவரி துறை மூலமாக ஒரு விவசாயின் கோரிக்கை ஏற்கப்பட்டு அவருடைய வயலில் தனியாக ட்ரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கான இலவச மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது.
*இதற்காக அந்த விவசாயி எந்த ஒரு மின்வாரிய அதிகாரிக்கோ மற்ற அரசு ஊழியர்களுக்கோ ஒரு ரூபாய் கூட லஞ்சமாக தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது*
திருப்பராய்த்துறையை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி சமூக ஆர்வலர் பல ஏழை மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு தமிழக முதல்வரின் முகவரி துறை மூலமாக பல்வேறு உதவிகளை பெற்று தந்திருக்கின்றார். அந்த வகையில் சந்திரமோகன் என்கின்ற ஒரு விவசாயி தன்னுடைய நிலத்திற்கு மின் இணைப்பு கேட்டு பலமுறை மின்வாரிய அலுவலர்களை தொடர்பு கொண்டதாகவும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவரிடம் கோரிக்கை வைத்திருந்தார். அவரின் கோரிக்கையை உடனடியாக முதலமைச்சரின் தனி பிரிவான முகவரி துறைக்கு பதிவு செய்தார் அவர்.
உடனடியாக முதல்வர் அவர்களின் தனிப்பிரிவில் இருந்து அந்த விவசாயிக்கு உரிய மின் இணைப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பறந்த வேகத்தில் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக விவசாயி சந்திரமோகனின் நிலத்தில் டிரான்ஸ்பார்மர் நிறுவி மின் இணைப்புகளை உறுதி செய்தனர்.
இதன் மூலமாக தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் என்கின்ற மாயபிம்பம் உடைத்தெரியப்பட்டு விட்டது. முதல்வரின் தனி பிரிவான முகவரி துறைக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு கோரிக்கைகளும் உடனடியாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவற்றுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது தமிழகத்தில் திரு மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நல்லாட்சி நடைபெறுவதை உறுதி செய்யும் ஒரு சிறிய எடுத்துக்காட்டு ஆகும். ஒரு ஏழை விவசாயியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக தீர்வு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களுக்கும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி அவர்களுக்கும் மின்வாரிய அதிகாரிகளுக்கும் சமூக ஆர்வலர் அவர்களுக்கும் நியூ திருச்சி டைம்ஸ் தன் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
