

திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர , பொன்மலை பகுதி
பாக முகவர்கள் கூட்டத்தில் திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என பாகமுகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி.
திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி கிழக்கு மாநகர திமுகவின் சார்பில் பாகமுகவர்கள் ஆலோசனைக் கூட்டம் . கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் முன்னிலையில் நடைபெற்றது கூட்டத்தில்
திருவெறும்பூர்சட்டமன்ற தொகுதி பார்வையாளர் மணிராஜ் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பகுதி கழகச் தர்மராஜ் . மாநகர துணை செயலாளர் சரோஜினி மற்றும் பாகம் முகவர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்
கூட்டத்தில் இறந்த வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் அதனை கண்டறிந்து நீக்கம் செய்வது. 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் பணியையும் சிறப்பாக மேற்கொள்வது. 2026 சட்டமன்ற தேர்தலில் 200 என்ற இலக்கை அடைய அடைவதை குறிக்கோளாகக்கொண்டு பணியாற்ற வேண்டும். தமிழக அரசு கொண்டுவந்துள்ள மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் மக்களிடம் எடுத்துக்கூறி ஆதரவு திரட்டவேண்டும். மக்களை அடிக்கடி சந்தித்து அரசின் திட்டங்கள் குறகத்து பேசவேண்டும். எனவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் கிழக்கு மாநகரத்திற்குட்பட்ட பொன்மலை பகுதி பாகமுகவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
