

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் திரு மண்ணை மதியழகன் திரு கண்ணன் ஆகியோர்களை நியமித்து கிராமங்கள் தோறும் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பையும் ஊராட்சி பகுதி வாக்குச்சாவடி பகுதி கிராமங்கள் இவைகளில் காங்கிரஸ் கட்சியின் தொலைநோக்கு திட்டங்களையும் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் எடுத்து வைக்க வேண்டும் என்ற உன்னத கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு செல்வப் பெருந்தகை அவர்களின் உயர்ந்த குறிக்கோளை நிறைவேற்ற கந்தர்வகோட்டை ஒன்றியம் கறம்பக்குடி ஒன்றியம் புதுக்கோட்டை ஒன்றியம் ஆகிய பகுதியில் உள்ள கிராமங்களில் ஆய்வு செய்யப்பட்டது இதில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு முருகேசன் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சந்திரசேகர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் குமார் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டெக்ஸ்டைல் குமார் மற்றும் திருச்சி மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் பஜார் மைதீன் சுக்குறு இர்ஃபான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
