திருச்சியில் 30-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுனர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 30-ந் தேதி திருச்சி அரியமங்கலம் சேஷசாயி தொழில் நுட்ப பயிலகத்தில் காலை 09:00 மணி முதல் மதியம் 03:00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர் களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும், மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

இந்த முகாமில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, ஐடி டிப்ளமோ செவிலியர், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல் வித்தகுதியுடைய 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட வேலை தேடு பவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு, அனைத்து கல்விச்சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும், தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் வேலை தேடுபவர்கள், தமிழ்நாடு அரசின் https://www.tnprwatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்தும் பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 0431-2413510, 9499055901, 9499055902 திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *