திருச்சியில் மதுபான விடுதிகளுக்கு எதிராக அமமுக உண்ணாவிரதம்

பொதுமக்களின் எதிர்ப்பைமீறி கோவில், மருத்துவமனை, குடியிருப்புகள் அதிகம் நிறைந்த திருச்சி வயலூர்சாலை மற்றும் உறையூர் லிங்கநகர் பகுதியில் மனமகிழ்மன்றம் என்ற பெயரில் புதிதாக டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்துள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் விளம்பர திமுக அரசு, காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும்நிலையில் இன்றைய தினம் உயர்நீதிமன்ற அனுமதி பெற்று திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மாநகர் மாவட்டசெயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். திமுக ஆட்சியில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை அருகிலும் 24 மணி நேரமும் வெட்ட. வெளிச்சமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுவருவதாகவும்,

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் பொதுமக்கள் குடிக்காமல் இருக்கக்கூடாது என்ற நோக்கில் சாராயமாடல் என்ற பெயரில் இந்த அரசு செயல்படுவதாகவும், இதனை தட்டி கேட்க ஆள் இல்லாத காரணத்தினால் இது எல்லை மீறி தற்போது மனமகிழ்மன்றம் என்ற பெயரில் 24 மணிநேரமும் மதுபானகடைகள் இயங்கிவருவதாகவும் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் குற்றம்சாட்டினார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *