

யார் விளக்கு போடுவது? ரயில்வேயா, ஊராட்சியா?
மத்திய அரசா? மாநில அரசா?
இரண்டு வருடமாக அலைக்கழிக்கப்படும் மக்கள்.
திருப்பராய்த்துறையில் உள்ள ஆபத்தான சுரங்கப்பாதையில் விளக்குகள் அமைக்க கோரிக்கை கீழே காண புகைப்படங்கள் திறப்பராய்த்துறையில் உள்ள சுரங்கப்பாதை உடையது.
இந்த சுரங்க பாதையை பகலில் கடப்பதே இயலாத காரியம் மிகவும் ஆபத்தாகவும் பயமானதாகவும் தெரிகிறது ஏனென்றால் இங்கு நீர் தேங்கி நிற்கிறது ஊற்று தண்ணீர் எப்பொழுதும் வந்து கொண்டிருக்கிறது. சாதாரணமாக பகலில் நடந்தாலே கீழே விழுந்து விடுவோம்.
இந்த ஊரில் வசிக்கும் மக்கள் பல முறை எல்லாத் துறைகளிடமும் மனுக்கள் சமர்ப்பித்துள்ளனர். ஆனால் இன்றுவரை போதுமான உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது முதல்வரின் முகவரி துறையில் சமைக்க சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் விபரம்.
TN/RDPR/TRY/P/PORTAL/29OCT24/10406181
TN/RDPR/TRY/P/PORTAL/03DEC24/10587531
ரயில்வேயில் மின் விளக்குகள் கேட்டதற்கு அது ஊராட்சி ஒன்றியத்தால் போட்டு தர வேண்டும் என்று கூறுகிறார்கள். ஊராட்சி ஒன்றியத்தில் கேட்டதற்கு இது இன்னும் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை ஆகவே நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள்
பொதுமக்களாகிய நாங்கள் என்ன செய்வது?
மிகுந்த போராட்டத்திற்கு பிறகு இரண்டு மின் விளக்குகள் ரயில்வே ஒரு ஓரமாக நடுவில் போட்டுள்ளது .மேற்கொண்டு லைட்டுகள் கேட்டதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள், ஊராட்சி ஒன்றியத்தால் போட்டு தர வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அந்த ஊரில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் அங்க மின்சாரம் இல்லாமல் இருப்பதால் அந்த இடத்தை சமூக விரோதிகள் தவறான செயலுக்கு பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்கள். ஆகவே பாதுகாப்புக் கருதி தயவு செய்து அந்த இடத்தில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். சில சமயங்களில் அந்த இடத்தில் பலர் உட்கார்ந்து மது அருந்துவதாகவும் கூறுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு இதனுடன் இடைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=hXRHILLhUCk
https://www.youtube.com/watch?v=pYm6RwaoWWI
https://www.youtube.com/watch?v=a-PBDOxWAb4
https://www.youtube.com/watch?v=IIvBIWfDl7M
தயவுசெய்து மனிதநேயத்துடனும் கருணையிடனும் இரண்டு பக்கமும் 10 விளக்குகளை, மக்களின் நலன் கருதி பாதுகாப்புகளை கருதி ஊராட்சி ஒன்றியம் அமைத்துத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஊராட்சி ஒன்றியம், மக்களின் நலன் கருதி தயவு செய்து ஒரு பத்து லைட்டுகள் இரண்டு பக்கமும் போட்டு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.