மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய அமைச்சர்

கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையில் 40 வருடமாக குடி இருந்த ஓட்டு வீடானது இடிந்து விழுந்தது இதை இன்று திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகை வழங்கினார் 

திருச்சி: டிச5
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி 45 வது வார்டுக்கு உட்பட்ட
மேலகல்கண்டார்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயா (75 )இவரது மகன் கணேசன் (55) இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்
 இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையில் சுமார் 40 வருடங்களுக்கு மேல் மண் சுவரினால் கட்டப்பட்ட அவர்கள் தங்கி இருந்த ஓட்டு வீடானது இடிந்து விழுந்தது. 

 இத்தகவலை அறிந்த சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிகளுக்கு அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் இடிந்த வீட்டை பார்வையிட்டு நிவாரணத்தொகை வழங்கி அதிகாரிகளிடம் உடனடியாக அவர்களுக்கு வீடு கட்டுவதற்கான தேவையான பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தினார் மேலும் இந்நிகழ்வில் மாநகரச் செயலாளர் மண்டலகுழு தலைவர் மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் தர்மராஜ் மாமன்ற உறுப்பினர் சீதாலட்சுமி வட்டக் கழகச் செயலாளர் தமிழ்மணி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *