உலக மண் தினம்

தண்ணீர் அமைப்பு சார்பில் உலக மண் தினத்தை முன்னிட்டு பனை விதைப்பு உலக மண் தினத்தை முன்னிட்டு 05.12.24 மாலை 5.30 மணியளவில் பொன்மலை பகுதியில் பனை விதை நடப்பட்டது.

மண் நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்றாகும். அவை நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன, உணவுப் பொருட்களின் வளர்ச்சிக்கான முக்கியக் காரணியாக உள்ளன, மேலும் பல்வேறு உயிரினங்களின் தாயகமாகவும் உள்ளன. மண்ணின் தரத்தை பராமரிப்பதும், மண்ணின் தரத்தை உறுதி செய்வதும் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். தொழில்மயமாக்கல் மற்றும் மோசமான நில மேலாண்மை அமைப்புகள் பல இடங்களில் மண்ணின் தரத்தை குறைத்து, மண் அரிப்பு, வளம் குறைதல் மற்றும் பொருள் இழப்புக்கு வழிவகுக்கிறது. மண்ணின் தரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் அது நம் வாழ்க்கை மற்றும் உணவு முறையில் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்களுக்கு அறிவிப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது. மண் தினத்தை கொண்டாடும் விதமாக மாணவர்கள், மற்றும் நண்பர்கள் உடன் 200 மேற்பட்ட விதைகள் பொன்மலை மைதானம், பொன்மலைப்பட்டி பகுதியில் விதைக்கப்பட்டது.

இதில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாரும்,தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், மக்கள் சக்தி இயக்க நிர்வாகி குமரன், ஜீவானந்தம், ஸ்ரீ, தமிழ்மாறன், வெங்கடேஷ். விக்னேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டார்கள்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *