
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் இன்று நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் அதிமுக 20வது வார்டு கவுன்சிலர் கனகவல்லி அவர்களின் கணவர் தேசிங்கு ராஜா அவர்களை இரண்டு திமுக கவுன்சிலர்கள் தாக்கி உள்ளனர் இதனால் கவுன்சிலரின் கணவர் தேசிங்கு ராஜா அவர்களுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தற்பொழுது அவர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் மிகுந்த பதற்றம் நிலவி வருகிறது