மாடுபிடி வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சொல்வது எப்படி சாத்தியமாகும்- ஜல்லிக்கட்டு ராஜேஷ்

திருச்சி, ஜன.24  பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களுக்கு கட்டாயமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் – தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளர் திருச்சியில் பேட்டி

இன்று காலை தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்
ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

தமிழக அரசு ஆன்லைன் டோக்கன் ரத்து செய்வது, ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான இன்சூரன்ஸ் தேவையில்லை, ஜல்லிக்கட்டு குழுவினர்களிடம் உறுதிமொழி பத்திரம் வாங்கப்பட்டு வருவது போன்ற ஆணையை ரத்து செய்தும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இதனை வரவேற்கிறோம்.

அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் அதிக காளைகளை அடக்கம் வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை துறையில் பணி வழங்கப்படும், உயர்தர சிகிச்சை மையம் மற்றும் பயிற்சி மையம் 2கோடி செலவில் அமைக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.

இதனை தற்போது முதல்வர் அறிவிப்பது ஏன்? கடந்த தேர்தலில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார், தற்போது நான்கே முக்கால் வருடத்திற்கு மேல் கடந்து விட்டது. அதைப் பற்றி இதுவரை பேச முன்வரவில்லை. இந்நிலையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று சொல்வது எப்படி சாத்தியமாகும்.

நடைபெற்ற 26ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப் போகிறீர்களா அல்லது 2024-25 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பணி வழங்கப் போகிறீர்களா.

ஆட்சி முடிவதற்கு இரண்டு மாதமே உள்ள நிலையில் தற்போது இந்த அறிக்கைக்கு ஏன் கொடுக்கிறீர்கள். தற்போது அறிவித்தது முழுக்க முழுக்க அரசியலாகத்தான் பார்க்க வேண்டி உள்ளது. இது ஜல்லிக்கட்டு நலம் கருதி அறிவிக்கவில்லை.

கடந்த மூன்று வருடமாக ஜல்லிக்கட்டு வீரர்க்கான பணி வழங்க வேண்டும் என நாங்களும் தொடர்ந்து பல்வேறு ஜல்லிக்கட்டு அமைப்புகளும் கோரிக்கை வைத்து வந்தன.
தற்போது அறிவித்தது கண்துடைப்பு நாடகமாக தான் பார்க்கிறோம்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள கிளியூரில் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. அதற்கான அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளேன். ஆனால் சட்ட திட்டங்கள் காரணம் காட்டி அதை நடத்த முடியவில்லை. தற்போது பல்வேறு அமைப்புகள் அனுமதி கேட்ட பிறகு அந்த இடத்தில் வழக்கு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களுக்கு அரசாணை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். ஆனால், சம்பந்தமே இல்லாமல் கோயமுத்தூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது அதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஜல்லிக்கட்டு நடப்பதற்கான எந்த ஒரு பாரம்பரியமும் அங்கு கிடையாது.

அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் தற்பொழுது ஜல்லிக்கட்டு விழாக்கள் நடைபெற்று வருகிறது. கரூரில் செந்தில் பாலாஜி தலையீட்டிலும் இது நடைபெற உள்ளது.

ஜல்லிக்கட்டு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரியை கையில் செல்வதால் கிராமங்களில் நடத்த முன் வருவதில்லை. கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசாணை வெளியிடுவதற்கான தடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்,  பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களுக்கு கட்டாயமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும், அரசு அதிகாரியின் தலையிட்டை தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையென்றால் ஜல்லிக்கட்டு அழியும் பாதைக்குச் செல்லும் என தெரிவித்தார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *