கஞ்சா கடத்திய போலி தம்பதி-கைது

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து இரண்டுபேர் கஞ்சா வாங்கி வருவதாக திருச்சி மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு சி.ஐ.டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு சி.ஐ.டி போலீசார் திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் திருச்சி நோக்கி வந்த காரை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் காரில் வந்த இரண்டு பேர் தாங்கள் கணவன் மனைவி என்று கூறி முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இருவரிடமும் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.அதில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், கடம்பூரை சேர்ந்த கருப்பையா மகன் சரவணன் (45), மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சேர்ந்த ரெங்கநாதன் மனைவி மஞ்சுளா என்கிற மணிமேகலை (30) என்பதும், இருவரும் கணவன் மனைவி இல்லை என்பது தெரியவந்தது.மேலும் இரண்டு பேரும் திட்டமிட்டு ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திற்கு சென்று அங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பூர்ணராவ் என்பவரிடம் 22 கிலோ கஞ்சாவை வாங்கி கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இரண்டு பேரையும் கைது செய்தனர்…!!!

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *