

இன்று (9-12-24)அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் திருச்சி பழைய கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள பள்ளியில் பள்ளி குழந்தைகள் உடன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பஜார் மைதீன் தலைமையில் பள்ளி குழந்தைகள் பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் கலந்து கொண்டு குழந்தைகளுடன் கேக் வெட்டி பள்ளி குழந்தைகளுக்கு நோட் புத்தகம் பேனா பெஞ்சில் வழங்கினார்.
நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் மூத்த தலைவர் கள்ளத்தெரு குமார் தொழிலாளர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் எல்ஐசி ஜெயராமன் மாநில ஓபிசி பொதுச் செயலாளர் தட்சிணாமூர்த்தி இளைஞர் காங்கிரஸ் கம்பை பாரத் ஜிம் விக்கி கோகுல் நிர்மல் பாவா சுக்குறு உறையூர் இர்ஃபான் தென்னூர் பக்ருதீன் தர்கா சேக் வள்ளுவர் நகர் ஆனந்த் சிந்தை ஸ்ரீராம் புவன் வினோத் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
