
தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம், டிச 09-
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சொக்கநாதபுரம் பகுதியில் அமைந்திருக்கும் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சொக்கநாதர் மீனாட்சி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத் திருக்கோவிலில் இன்று கார்த்திகை 4 வது வாரம் திங்கள்கிழமை சோமவாரத்தை முன்னிட்டு சொக்கநாதருக்கு பெருமானுக்கு 16 வகையான திரவியங்கள் பயன்படுத்தி அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் கோயில் வளாகத்தில் ஹோமம் வளர்த்து,108 சங்கி”ல் மஞ்சள் குங்குமம் விபூதி சந்தனம் இளநீர் பால் பஞ்சாமிர்தம் பன்னீர் திரவிய பொடி போன்றவை நிரப்பி சொக்கநாதருக்கு
அபிஷேகம் செய்தனர், பின்னர் அலங்கரித்த சொக்கநாதர் கடவுளை பக்தர்களுக்கு காட்சியளித்தார், இதில் ஏராளமான சிவ பக்தர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் அருள் பெற்று சென்றனர். அதன் பின்னர் கோவில் நிர்வாகம் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டன..
