மாநகராட்சிக்கு உட்பட்ட காட்டூர் , திருவெறும்பூர் பகுதி மக்கள் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி: டிசம்பர்14

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட காட்டூர் பகுதி37,37a, 38,38a,39a,39,40a,40 வது வார்டு பகுதியில் மக்களிடம் மனுக்களைப் பெற்றார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்

இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிகள்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

மேலும் இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த காட்டூர், திருவெறும்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் ரூபாய் 7,486.78 மதிப்பீட்டில் மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் சாலை அமைக்கும் பணி, குடிநீர் வசதி, மழைநீர் வடிகால் வசதி, அங்கன்வாடி, சமுதாயக்கூடம், ஊரக சுகாதார நிலையம் கட்டுதல், தாமரைக் குளம் சீரமைத்தல், வாய்க்கால் தடுப்பு சுவர் அமைத்தல்உ,ட்பட பல்வேறு பணிகளை இந்த மூன்று ஆண்டுகளில் பணிகளை முடித்து அதை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் எனினும் பொது மக்களின் அனைத்து குறைகளையும் தீர்க்க முடியுமா என்றால் அதற்கு ஒரே தீர்வு இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தான் என்றும் இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக நானும் மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் பொதுமக்களாகியஉங்களைநேரில் சந்தித்து அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களின் குறைகளை ஒரே இடத்தில் கேட்டறிந்து அதை அரசு அதிகாரிகளிடம் எடுத்துரைத்து அதற்கு உடனடி தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட கூட்டம் தான் இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் என்றும்

தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தல் படி இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படுவதாகவும் இந்தக் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் அருகே அரசு அதிகாரியிடம் உடனடியாக வழங்கப்பட்டு அதற்கான தீர்வு கேட்கப்பட்டு வெகு விரைவில் முடிக்கப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் எடுத்துரைத்தார்

மேலும் இந்நிகழ்வில் மாநகர செயலாளரும் மண்டல குழு தலைவருமான மதிவாணன், காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம் திருவெறும்பூர் பகுதி செயலாளர் சிவக்குமார் மாநகராட்சி துணைப் பொறியாளர் ஜெகஜீவன் ராம் மாநகராட்சி இணை ஆணையர் சரவணன் வட்டாட்சிய ஜெயபிரகாஷம் தமிழ்நாடு மின்சார வாரியம் துணை நிர்வாக இயக்குனர் காளிதாஸ் மாமன்ற உறுப்பினர்கள் தாஜுதீன், ரெக்ஸ், வட்டக் கழக செயலாளர்கள் தமிழ்மணி, மன்சூர் ,வினோத் கனகராஜ், செல்வராஜ், அருண், குணாநிதி,
மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *