முதல்வரின் 50 சதவீத பணியை தனது தோளில் சுமந்து கொண்டு பணியாற்றுபவர் தான் இன்று பிறந்தநாள் விழா காணும் துணை முதல்வர் என்று எடுத்துரைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

திருச்சி டிச19

         திராவிட மாடல் ஆட்சி நடத்தக்கூடிய முதல்வர் அவர்களின்  கரத்தை மக்களாகிய நீங்கள் வலுப்படுத்த வேண்டும்  உங்களுடைய ஆதரவின் மூலம் அவர் உங்களுக்காக கொண்டுவரும் திட்டம் முழுமையாக உங்களை வந்துசேர்கிறது இதனால் முழு நம்பிக்கையும் பெற்று நிம்மதியாக வாழ்கிறீர்கள்

இதற்கு ஒரே காரணம் யார் என்றால் அது தமிழக முதல்வர் தான் என்றும்
மேலும் எதிர் கட்சியை சார்ந்தவர்கள் பேசும்போது எல்லாம் நாங்கள் இரண்டரை கோடி உறுப்பினர்களை கொண்டுள்ள இயக்கம் என்று கூறுகிறார்கள் அது அவர்கள் இயக்கம் கூறுவதில் தவறு ஏதுமில்லை ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் ஒட்டுமொத்தமாக வாங்கிய வாக்குகள் 89 லட்சம் வாக்குகள் மட்டும்தான்
அப்படியானால் ஒரு கோடி 60 லட்சம் பேர் எங்கு சென்றார்கள் என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவளித்து தமிழக முதல்வரின் கரத்தை வலுப்படுத்தி உள்ளனர் என்றும்
மேலும் 2021ல் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் கூறும் பொழுது நமக்கும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கும் பெரியதாக வாக்கு வித்தியாசம் இல்லை என்றும் வெறும் ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் தான் என்றும் கூறுகின்றனர்.

        ஆனால் உண்மை நிலை என்னவென்றால் திமுக கூட்டணி பெற்றது ஒரு கோடியே 74 லட்சம் வாக்குகள் ஆனால் எதிர்க்கட்சிகள் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 53 லட்சம் வாக்குகள் ஏறக்குறைய 20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றுள்ளோம் என்றும் இந்த முறை 34 இடங்களில் நின்று வெறும் 21 சதவீத வாக்குகள் தான் பெற்றிருக்கிறார்கள் என்றும் அவர்கள் வளர்கிறார்களோ தேய்கிறார்களோ என்பதை நமக்கு தேவையில்லை ஆனால் ஒட்டுமொத்தமாக அவர்களுடைய வாக்குகளும் திமுகவிற்கு தான் வாக்களிக்கப்பட்டதாகவும் எடுத்துரைத்தார் மேலும் தமிழக முதல்வரின் அன்றாட பணியில் 50% பணியை தனது தொழில் சுமந்து கொண்டு பணியாற்றுபவர் தான் இன்று பிறந்தநாள் விழாகானும்  துணை முதல்வர் என்றும் எடுத்துரைத்தார் மேலும் சிறுபான்மையினருக்காக தோளோடு தோல் நின்று உழைக்கக்கூடிய இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் சிறுபான்மையினர் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காக உழைக்கக் கூடியவர் தான் மாண்புமிகு முதல்வர் என்றும் எடுத்துரைத்தார்.
  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *