

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பிச்சாண்டார்கோயில் பஞ்சாயத்து நிர்வாகத்தால் கொள்ளிடம் பாலம் மின்விளக்குகளை தொடர்ந்து எரியவிடுவதில் பொருளாதார சிக்கலா? மின்கட்டணம் பாக்கியா?. அல்லது மின்சாதனங்கள் வாங்க முடியவில்லையா?
மின் வெளிச்சம் இல்லாத காரணத்தால் கொள்ளிடம் பாலம் முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது இதை சாதகமாக்கிக்கொண்ட மதுபிரியர்கள் No1 டோல்கேட் பகுதியில் உள்ள மது கடையில் மதுவை வாங்கிகொண்டு வடக்கு பகுதியிலும் தென்பகுதியில் அழகிரிபுரம் செக் போஸ்ட் பகுதியில் உள்ள மதுகடையில் மது வாங்கிகொண்டு பாலத்தின் இரு பகுதியிலும் திறந்தவெளி பாராக பயன்படுத்துகின்றனர் ஏதேனும்பெரிய அளவில் குற்ற சம்பவங்கள் நடக்கும் முன்பு பஞ்சாயத்து நிர்வாகம் மின்விக்குகளை எரியவிட முயற்ச்சிக்கவேண்டும் இல்லையேல் கொள்ளிடம் பாலம் மின் விளக்குகளை இயக்குவதையும் பாதுகாப்பதையும் திருச்சி மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் சமூக செயற்பாட்டாளர் சிட்டிசன் கே.காமராஜ் கொண்டயம்பேட்டை (6379846355)
