

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியும்,வேதனையும் அளிக்கிறது. கல்வி பயிலும் இடஙகளே மாணவிகளுக்கு பாதுகாப்பாக இல்லாத சூழல் நிச்சயம் அச்சுறுத்தக் கூடியது.
அதுவும் குற்றவாளி குற்றம் செயவதை வழக்கமாக கொண்டிருப்பவர் என்பதையும், அவர் மீது இதுவரை ஏழு குற்றப் பத்திரிக்கைகள் நிலுவையில் உள்ளன என்பதையும் நாம் எளிதாக கடந்து போய் விட முடியாது.
மாணவியை அவர் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதோடு,அவரை வீடியோ எடுத்து அவரை வேறு ஒரு நபரிடம் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியாக வரும் செய்திகள் மிகுந்த கவலையும்,துயரமும் அளிக்கிறது. இது போன்ற கொடுமைகளுக்கு பல பெண்கள் தொடர்ந்து உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
ஒவ்வொருமுறையும் இப்படியொரு பாலியல் வன்கொடுமை நடக்கின்ற போது பொங்கி எழுவதும்,பிறகு அதை கடந்து போய்விடுவதுமான சூழலால் ஒருபோதும் பெண்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க முடியாது.

இம்மாதிரியான பாலியல் வன்கொடுமை நிகழும்போது ஒரு சமூகமாக நாம் கடுமையாக எதுவினையாற்றுவதோடு மட்டுமல்லாமல் குடும்பம்,பணியிடம்,பொதுவெளி என்று அனைத்து இடங்களையும்,பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாற்ற தொடர்ந்து பணியாற்ற வேண்டும். தொடர்ந்து பெண்கள் தொடர்பான சமூகப் பார்வையை,உரையாடலை மாற்றியமைப்பதோடு,பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் பெண்கள் பாதுகாப்பாக உணர முடியும்.
செ.ஜோதிமணி எம்.பி