

மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசு நிர்வாகங்களை கண்டித்து 2025-ம் ஆண்டு முழுவதும் தொடர் போராட்டம் நடத்த திருச்சி மாநகர் மாவட்ட அமமுக முடிவு
கழகப் பொது செயலாளர், மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க
திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்,

திருச்சி மாநகர் மாவட்ட இணை செயலாளர் திருமதி வண்ணை லதா அவர்கள் தலைமையில்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் திரு ப .செந்தில்நாதன் EX.Mc அவர்கள் முன்னிலையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது,
இக்கூட்டத்தில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:
- மக்கள் செல்வர் அவர்களின் பிறந்த நாள் விழாக்கள் மற்றும் கழக கொடி ஏற்றுதல் தொடர்பாகவும் , 2024-ம் ஆண்டு முழுவதும் சிறப்பான முறையில் செயல்பட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தல்.
- மக்கள் செல்வர் அவர்களின் திருச்சி வருகை (ஜனவரி 5) குறித்தும், அதற்கான சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து.
- மக்கள் செல்வர் ஆணையுடன் திருச்சியில் வருகின்ற 2025 ஆண்டு தொடங்கி, ஆளும் திறனற்ற, அடக்குமுறை திமுக அரசு மற்றும் நிர்வாகங்களை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்துவது குறித்து.

இக் கூட்டத்தில்
மாவட்ட நிர்வாகிகள்
திருவாளர்கள் தன்சிங், ஹேமலதா,
மாநில நிர்வாகி திரு பஷீர் அகமத்,
பகுதி மற்றும் ஒன்றிய செயலாளர்கள்
திருவாளர்கள் கல்நாயக் சதீஷ்குமார், கம்ருதீன், வேதாந்திரி நகர் பாலு, உமாபதி, வெங்கட்ரமணி, மதியழகன், இளையராஜா, கருப்பையா, இளங்கோவன், குப்புசாமி, அனலை சங்கர்,
சார்பு அணி செயலாளர்கள்
திருவாளர்கள் வக்கீல் பிரகாஷ், நாகூர் மீரான், சாந்தா, ஜான் கென்னடி, நல்லம்மாள், NS. தருண், கோமதி மங்கை, கல்லணை குணா, செந்தில்குமார், ராமலிங்கம்,
மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வரும் ஜனவரி 5 ஆம் தேதி கழகப் பொதுச் செயலாளர், வருங்கால முதல்வர் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்கள்,
திருச்சி வருகை ஒட்டி, அவர்களுக்கு மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் எவ்வாறு வரவேற்பு அளிப்பது பற்றியும்,
தொகுதி வாரியாக நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது,
இவன்
தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்சி மாநகர் மாவட்டம்
