ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் அதிரடி மாற்றம்

திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 17 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை, திருவாரூர், அரியலுார், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தர்மபுரி, காஞ்சிபுரம், தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த, 17 சார் பதிவாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், சார் பதிவாளர்களுக்கு பொது மாறுதல் வழங்குவது, சில

ஆண்டுகளாகவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனவே, சார் பதிவாளர்கள் சொந்த காரணங்களுக்காக, விரும்பிய ஊர்களுக்கு, இடமாறுதல் பெற முடியாத நிலைமை ஏற்பட்டது.

இதையடுத்து, தற்போது அரசின் அனுமதியுடன், சொந்த காரணங்கள் அடிப்படையில், இடமாறுதல் வழங்கும் பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன.. இதன்படி ஏற்கனவே, 19 சார் பதிவாளர்கள் மாற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் 17 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி, கோவை, திருவாரூர், அரியலுார், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தர்மபுரி, காஞ்சிபுரம், தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த, 17 சார் பதிவாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-


“ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வனிதா காஞ்சிபுரம் நிர்வாக சார்பதிவாளராகவும், பெரியநாயக்கன்பாளையம் தற்காலிக இணை சார்பதிவாளர் ரமேஷ் கிருஷ்ணகிரி நிர்வாக சார்பதிவாளராகவும், கோபிசெட்டிபாளையம் சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளர் தமிழ்செல்வி பாளையங்கோட்டை வழிகாட்டி சார்பதிவாளராகவும், கீழ்ப்பழுர் சார்பதிவாளர் சேசோபா அரியலூர் 1 எண் இணை சார்பதிவாளராகவும், நாகலூர் சார்பதிவாளர் அண்ணாதுரை பெரம்பலூர் சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளராகவும், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூண்டி சார்பதிவளர் வாசுதேவன் சென்னை துணைப்பதிவுத்துறை தலைவர் அலுவலக ஆழ்ந்த சீராய்வு சார்பதிவாளராகவும், தருமபுரி 2 எண் இணை சார்பதிவாளர் மாரியப்பன் மாரண்டஹள்ளி சார்பதிவாளராகவும், பாளையங்கோட்டை முறப்பநாடு சார்பதிவாளர் கண்ணன் குன்றத்தூர் சார்பதிவாளராகவும் காஞ்சிபுரம் 4 எண் இணைசார்பதிவாளர் நெடுஞ்செழியன் செட்டிகுளம் சார்பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


இதேபோல பல்லாவரம் சார்பதிவாளர் அறிவழகன் புதுக்கோட்டை நிர்வாக சார்பதிவாளராகவும், வேலகவுண்டம்பட்டி சார்பதிவாளர் அருள்குமார் கரூர் அசல் பத்திரப்பதிவு கண்காணிப்பாளராகவும், செங்கல்பட்டு 1 எண் இணை சார்பதிவாளர் அன்பழகன் துவரங்குறிச்சி சார்பதிவாளராகவும், அருப்புக்கோட்டை சார்பதிவாளர் மாலினி ஜெயஸ்ரீ மதுரை தெற்கு புலனாய்வு சார்பதிவாளராகவும்


தென்காசி 2 எண் இணை சார்பதிவாளர் மதிவாணன் சேத்தூர் சார்பதிவாளராகவும், பெரியகுளம் சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளர் சோபனா செங்கல்பட்டு தலைவர் அலுவலக நிர்வாக சார்பதிவாளராகவும், செய்யூர் சார்பதிவாளர் பசுமதி மயிலாடுதுறை சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *