

திருச்சி மாநகர் ஸ்ரீரங்கம் பகுதி 5வது வார்டு மேல கொண்டையம் பேட்டை வாய்க்கால் மேடு பகுதியில் நீத்தார் நினைவு மண்டபம் மற்றும் ஆற்றில் நீராடச் செல்பவர்கள் செல்லும் பாதை,5 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் முத்துக்குமார் அவர்களது மாமன்ற உறுப்பினர் பொது நிதியில் ( இரண்டு லட்சம் ரூபாய்) சீரமைக்கப்பட்டது. இவர் மதிமுக வை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர்களும் இவரைப்போலே பொதுமக்கள் பணி செய்தால் நிச்சயமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பெறுவார்கள் ஆனால் இந்த அப்பீஸ் முத்துக்குமாரை போல மக்கள் பணி செய்வதற்கு எந்த மாமன்ற உறுப்பினர்களுமே தயாராக இல்லையே கலெக்ஷனும் கமிஷனும் மட்டுமே இவர்கள் கண்களுக்கு தெரிகின்றது எப்பொழுது இவர்கள் மாறுவார்கள் அல்லது மாற்றுவோமா என்று வேதனையோடு புலம்புகிறார்கள் மற்ற வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள்.
