
தேசிய அளவில் கோப்பைகள் வென்ற “ஆனந்த் பிரதர்ஸ்”
சேலம், மாவட்டம், கெங்கவல்லி தாலுகாவில் தம்மம்பட்டி பேரூராட்சி ஒன்பதாம் வார்டு, கோனேரிப்பட்டி பகுதியில் உள்ள “ஆனந்த் பிரதர்ஸ்”கபடி கிளப் அணியினர் தொடர்ந்து கோப்பைகளை வென்று வருகிறார்கள், பலமுறை தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தங்களின் சாதனைகள் ஏராளம் உள்ளது, ஊரக சார்பாக கபடி போட்டிகளும் நடத்தி வருகிறார்கள். அதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மிக பெரிய அளவில் கபடி வீரர்கள் பங்கேற்று கோப்பைகளை தட்டி செல்ல ஆனந்த் பிரதர்ஸ் கபடி கிளப் ஊக்குவித்து வருகிறார்கள், சிறுவர்கள் முதல் பெரியோர் வரை கபடி நாயகர்களாக காலம் காலமாக வெற்றி மழையில் தங்களின் சாதனைகளை நிரூபித்து வருவது தான் மிக பெரிய அடையாளம் இவர்களுக்கு, விளையாட்டு, கபடியில் சிறந்த ஊராக கோனேரிப்பட்டி உள்ளது, சுற்று வட்டார பகுதியில் மட்டும் அல்ல வட தமிழகம், தென் தமிழகம் என தமிழகத்தில் பெயர் பெற்று வரும் அணியாக”ஆனந்த் பிரதர்ஸ் “கபடி கிளப் உள்ளது, ஆனால் இவர்கள் இப்போது அரசு சார்ந்த இடத்தில் தான் கபடி பயிற்சி எடுத்து வருகிறார்கள் நிரந்தரமாக கபடிக்காக தனி மைதானம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது தான் இவர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பு..
bj நவீன் (இதழியாளர் )