
இயக்குனர் திரு லோகேஷ் கனகராஜ் பற்றி பகிர்ந்து கொண்ட நடிகர் திரு கார்த்திபிரபு..
“பரமன் “படத்தில் நடிக்கும் முன்பே கார்த்திபிரபு எனக்கு சிறந்த நண்பரானார் “எதற்கும் துணிந்தவன் “படத்தில் வரும் பிளாஷ்பேக் “காட்சியில் சிறு ரோல் நடித்துள்ளார், அப்போது இருந்து எனது பத்திரிக்கை பயணம் மூலம் அவரிடம் நட்பில் இருந்தேன், தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்த கார்த்திபிரபு அவர்கள் தலைநகரம் இரண்டாம் பாகத்தில் இயக்குனரும் நடிகருமான திரு சுந்தர் சி அவருடன் நடித்த போது மிக பெரிய வரவேற்பு மக்களிடத்தில் பெற்றார், அதன் பின்பு இயக்குனர் திரு லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் “லியோ “படத்தில் நடித்த அனுபவம் பற்றி சிறு அப்டேட் கொடுத்தார், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் படபிடிப்பு தளத்தில் அதிகமாக பேச மாட்டார், விறுவிறுப்பாக உதவி இயக்குனர்கள் மற்றும் பட குழுவினரை வேலை வாங்குவார், அதிகம் மெனகெடுவார், தன்னுடைய இயக்கம் மீதும், படபிடிப்பு மீதும் அதிகம் கவனம் கொள்வார் வேகம் அதிகமாக இருக்கும்.
செட்டில் அவரிடம் நான் பார்த்த அனுபவம் அதுதான். தளபதி விஜய் சார் பக்கத்தில் நின்று நடிக்கும் வாய்ப்பு லியோ படத்தில் கிடைத்தது ரொம்ப எனக்கு பெரிய விசயம்.. அதை தொடர்ந்து விஜய் டிவியில் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் “சிட்டி”யாக நெகடிவ் ரோலில் மெயின் கேரக்டர் செய்து வரும் நடிகர் கார்த்தி அவர்களுக்கு தற்போது மிக பெரிய வரவேற்பு தமிழ் மக்களிடம் கிடைத்து வருகிறது.. பரமன் படப்பிடிப்பில் என்னுடன் பகிர்ந்து கொண்ட நிகழ்வுகள்… (bj நவீன் )