
பதிவு நாள் : 27.10.2024
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம் பேட்டவாய்த்தலை ஊராட்சியில், பழங்காவேரி முதல் காமநாயக்கன்பாளையம் வரை செல்லும் சேதமடைந்த சாலையானது
கடந்த சில நாட்களுக்கு புதுப்பிக்கப்படும் பொருட்டு பழைய சாலை பெயர்க்கப்பட்டது.
சாலை பணிகள் ஆரம்பிக்கும் போதே எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. பணியின் தூரம் உள்ளிட்ட விபரப்பலகை பற்றி கேட்டதற்கு சரியான தகவல் இல்லை.
எத்தனை நாட்களில் சாலை போடப்படும் தீபாவளி நேரத்தில் சாலை பறித்துப்போட்டால் மக்கள் பாதிப்படைவார்கள் என எடுத்துரைத்த போது ஒரே வாரத்தில் சாலை புதுப்பிக்கப்பட்டுவிடும் என உத்தரவாதம் ஊராட்சி நிர்வாகத்தால் அளிக்கப்பட்டது.
ஆனால் இரண்டு வாரங்கள் கடந்தும் தற்போது வரை சாலைப்பணிகள் முடியாததால் சுமார் இரண்டு கி.மீ வரை தொலைவுள்ள இச்சாலையில் வசிக்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இச்சாலையில் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராமநிர்வாக அலுவலகம், கால்நடை மருந்தகம், உயர்நிலைப்பள்ளி, பால்வாடிகள், என மக்கள் பயன்பாடு அதிகம் உள்ள சாலை
தீபாவளி நேரத்தில் இப்படி பறித்து போடப்பட்டு இருப்பது குறித்து ஊராட்சி நிர்வாகம் வசமும், அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வசமும் முறையிட்டும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத நிலையில் இருப்பதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
இச்சாலையில் இருக்கும் சரளை கற்கள் சருக்கி விடுவதால் வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம்.
உயிருக்கு ஆபத்தோ அல்லது கை, கால் முடமோ ஆகும் அவல நிலை.
விரைவில் சம்மந்தப்பட்ட துறையினர் ஓரிரு நாட்களில் சாலைப்பணியினை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் சாலைப்பயனீட்டாளர் நல அமைப்பு மற்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள்