
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் , திருப்பராய்த்துறை ஊராட்சியில் உள்ள கிராமங்களானது வயல்வெளிகளால் சூழப்பட்டுள்ளது, தற்போது நெல் சாகுபடி தொடங்கிவிட்டபடியால் நாத்து நட்டு அனைத்து வயகளிலும் நீர் தேங்கி நிற்கிறது.
கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசு புழுக்களை ஒழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பெருகமணி ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவர் வினோத்குமார் அவர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர் திரு குருநாதன் பொதுமக்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி நேற்று சுழற்சி முறையில்
கொசு மருத்துவம் அடிக்கும் பணி காமராஜர் நகர் மற்றும் நந்தவனம் பகுதிகளில் நடந்தது இந்த ஊராட்சியில் மற்ற பகுதிகளில் படிப்படியாக அனைத்து இடங்களிலும் கொசு மருந்து புகை அடிக்கப்பட்டது.
காதார துறை ஆய்வாளர் அவர்கள் அந்தப் பகுதியை ஆய்வு செய்து மக்களுக்கு வழங்கிய அறிவுரை என்னவென்றால், முதலில் நம் வீட்டில் மற்றும் வீட்டை சுற்றி உள்ள தொட்டிகள், பிளாஸ்டிக் பொருட்கள், பயனற்ற வாளிகள் & வண்டி டயர் மேலும் தண்ணீர் தேங்கும் அனைத்து இடங்களிலும் சுத்தம் செய்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார். வீடுகளில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.சாக்கடைகள் தேங்கி நிற்காத அளவிற்கு வடிகால்களை தூர்வார வேண்டும். குடியிருப்புகளின் அருகில் உள்ள மாட்டு தொழுவங்கள் உரிய சுகாதாரத்துடன் பராமரிக்கப்பட வேண்டும் ,குடியிருப்பு பகுதிகளில் உள்ள புதர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் இந்த ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதம் முழுவதும் குடிநீரை காயவைத்து அருந்தவும் & சளி, காய்ச்சல் ஏதேனும் வந்தால் நிலவேம்பு கசாயம் குடிக்கவும் வலியுறுத்தினார்.
கனமழை பெய்த்த்தன் காரணமாக வீடுகளில் தண்ணீர் தேங்கி நிற்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே வீடுவீடாக கொசு மருந்து அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் திருப்பராய்த்துறை ஊராட்சி ஆட்சி நிர்வாகமும்
கொசு மருந்து அடிக்கும் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
கொரோனாவுக்கு பின்னர் முதல்முறையாக திருப்பராய்த்துறை ஊராட்சியில் காமராஜ் நகர் மற்றும் நந்தவனம் பகுதியில் கொசு மருந்து அடித்ததற்கு கிராம மக்கள் நன்றி கூறினார்கள்.
ALL THE BEST