

திருச்சி மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை !
பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, 03/02/2025 அன்று காலை 7.45 மணி அளவில் சத்திரம் பேருந்து நிலையம் கர்மவீரர் காமராஜர் திருஉருவசிலையில் இருந்து சிந்தாமணியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மௌன ஊர்வலமாகச் சென்று காலை 8.00 மணிக்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது .

இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக முன்னோடிகள் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறேன் .
நன்றி

அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
மாவட்ட கழக செயலாளர்,
தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர்,
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.
