
அனுப்புநர்:-
மு.திருவேங்கடம்யாதவ்,
மாவட்ட துணைத் தலைவர் ஆன்மீகம் மற்றும் திருக்கோயில் மேம்பாட்டு பிரிவு பாரதிய ஜனதா கட்சி
ஸ்ரீரங்கம், திருச்சி -620006.
9003118564.
பெறுநர்:-
மதிப்பு மிகு ஆணையர் அவர்கள்,
திருச்சி மாநகராட்சி
திருச்சி -620001.
ஐயா வணக்கம்,
பொருள்:-
வாரிசு சான்றிதழ் இருக்கும் சொத்து களுக்கு, தாமதமின்றி வரிவிதிப்பு ஆவணங் களில் பெயர் மாற்றம் செய்து தரக் கோரிக்கை விடுத்து
ஸ்ரீரங்கம் கோட்டம் 1 – 7 வார்டுகளில், சொத்து வரி பெயர் மாற்றம் செய்வது சமீப காலமாக
நிறுத்தப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு சிரமங்களை ஸ்ரீரங்கவாசிகள் பலர் அனுபவித்து வருகின் றனர். எனவே, இதை களையும் பொருட்டு போர்கால அடிப்படை யில் தாங்கள் ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 1-7 வார்டுகளில் வாரிசு ஆவணங்கள் தெளிவாக இருப்பவர்களுக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்து தர தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
மு.திருவேங்கடம் யாதவ் 26/10/2024 ஸ்ரீரங்கம்.
All the best