
விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்டத்தின் சார்பாக தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், கடுமையான சட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தியும் விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்டம் சார்பாக
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி அரியமங்கலம் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் முன்பு மாவட்ட தலைவர் தெளலத் நிஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட பொது செயலாளர் S.ஷமீனா பர்வீன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்திற்கு மாநில செயலாளர் M.மெஹராஜ் பானு அவர்கள் கலந்து கொண்டு கண்டன எழுச்சி உரையாற்றினார் .
மேலும் விம் திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் அ.மசூதா மரியம் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் திருச்சி மாவட்ட துணைதலைவர் தளபதி அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
மாவட்ட துணை தலைவர் மூமினா பேகம் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினார்.
இந்நிகழ்வை திருவெறும்பூர் தொகுதி தலைவர் J.பாத்திமா அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இதில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள்,தொகுதி ,அணிநிர்வாகிகள்,விம் நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.
இறுதியாக திருவெறும்பூர் தொகுதி செயலாளர் ரம்ஜான் அவர்கள் நன்றியுரையாற்றினார்.