
மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள், கழக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில், தலைமைக் கழக முதன்மைச் செயலாளருக்கு என புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அறையை இன்று அமைச்சர் KN.நேரு அவர்களுக்கு வழங்கி வாழ்த்தினார்.

அப்போது, கழகப் பொதுச் செயலாளர் – மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் – மாண்புமிகு வனத்துறை அமைச்சர் முனைவர். க.பொன்முடி, கழக அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.எஸ். பாரதி, கழக செய்தித் தொடர்புத் தலைவர் திரு.டி.கே.எஸ். இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர்கள் திரு. துறைமுகம் காஜா, திரு. பூச்சி எஸ். முருகன், கழகத் துணை அமைப்புச் செயலாளர்கள்
திரு.ப. தாயகம் கவி, எம்.எல்.ஏ., திரு. எஸ். ஆஸ்டின் ஆகியோர் உடனிருந்தனர்.
