சென்னை
பிப். 22
நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஜர்னலிசம் மையம் மூலமாக டிப்ளமோ இன் ஜர்னலிசம் சான்றிதழ் வழங்கும் விழா சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது .
இதில் சிறப்பு விருந்தினராக உயர்திரு நாகாலாந்து கவர்னர் இல. கணேசன், ஆர். லட்சுமிபதி இணை இயக்குனர் தினமலர், காலச்சக்கரம் நரசிம்மா ஜர்னலிஸ்ட் , சுப்பு ரைட்டர் மற்றும் எம். ஆர் . ஜெய் கிருஷ்ணன். கரஸ்பாண்டன் . கலந்து கொண்டனர்.
இதில் சமூக சேவகர் , சிறந்த மருத்துவ சேவகர் , சிறந்த சமூக ஊடகவியலாளர், போன்ற விருதுகள் மற்றும் ஜர்னலிசம் பயின்ற மாணவர்களுக்கு (3rd batch) சான்றிதழ்களையும் . உயர்திரு. நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் அவர்களின் திருக்கரங்களால் வழங்கப்பட்டது.
நியூ தி்ருச்சி டைம்ஸ் மின்னிதழின் மாவடட தலைமை நிருபர்கள் திருச்சி கண்ணன் பஞ்சாபி மற்றும் தேனி ராகவேந்திர ராஜா ஆகியோர் ஆளுனர் அவர்களின் திருக்கரங்களால் சான்றிதழ் பெற்றனர்.

இத்துடன் இந்நிகழ்ச்சியில் நகரேஷீ காஞ்சி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது புத்தகம் எழுதியவர் லெ. தீபா அவர்கள். இல. கணேசன் அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு, முதல் புத்தகத்தை பெற்றுக் கொண்டார்.


