முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி “அம்மா” பிறந்தநாள். அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி அறிக்கை

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:-

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க…

கழகத்திற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்த நாளான 24.2.2025, திங்கட்கிழமை அன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் பற்றிய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சி பகுதி, வட்ட அளவில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் மன ஆறுதல் பெறும் வகையில் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கீழ்க்கண்ட இடங்களில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் கலந்து கொள்கிறார்.

24.2.2025, திங்கட்கிழமை

🌟காலை 9.00மணி: சோமரசம்பேட்டை (மணிகண்டம் வடக்கு ஒன்றியம்)
🌟காலை 9.30மணி: வியாழன் மேடு (அந்தநல்லூர் தெற்கு ஒன்றியம்)
🌟காலை 10.00மணி: ஜீயபுரம் (சிறுகமணி பேரூராட்சி & அந்தநல்லூர் வடக்கு ஒன்றியம்)
🌟காலை 10.45மணி: முசிறி அண்ணாசிலை
🌟காலை 11.15மணி: கண்ணனூர் (துறையூர் வடக்கு ஒன்றியம்)
🌟காலை 11.30 மணி: துறையூர்
🌟 மதியம் 12.30மணி: மண்ணச்சநல்லூர் எம்ஜிஆர், அம்மா சிலை (மண்ணச்சநல்லூர் தொகுதி)
🌟மாலை 5.00மணி: JJ கல்லூரி அருகில் (மணிகண்டம் தெற்கு ஒன்றியம்)

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இங்ஙனம்:
அஇஅதிமுக, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *