
30/10/2024
மறுபடியும் முதல்ல இருந்தா?
திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை, பேட்டவாய்த்தலை உய்யக்கொண்டான் தலைப்பு மதகு பாலமானது தொடர்ந்து பள்ளம் உருவாகிவருவது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் புகைப்படத்தோடு பதிவிட்டிருந்தோம்.
தற்போது அந்த பாலத்திற்கு மீண்டும் ஒட்டுபோடும் பணியானது நடைபெற்று வருகிறது. இது குறித்து சாலைப்பயனீட்டாளர்கள் தெரிவிக்கையில் பாலத்தின் அடிப்பகுதியில் பிரச்சனை உள்ளது. எத்தனை முறை இந்த ஒட்டுபோடும் பணி நடைபெற்றாலும் ஒரு மாதம் கூட தாங்காமல் மீண்டும் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இப்பள்ளத்தினால் ஏகப்பட்ட விபத்துகள் நடைபெற்றுள்ளன. கரூர் பகுதியிலிருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள் வளைவான இப்பாலத்தின் பகுதியை கடக்கும் போது திடீரென பள்ளம் இருக்கும் பகுதியை அறிய வாய்ப்பில்லை. பகல் நேரத்திலாவது சற்று சுதாரிக்க முடியும்,
இரவு நேரத்திலும், மழைக்காலத்தில் இப்பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருக்கும் போது இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் இப்பள்ளத்தில் சிக்கி எலும்பு முறிவு, விபத்து போன்ற பிரச்சனைகளை மேற்கொள்கின்றனர்.
எனவே சேதமடைந்த பாலத்தின் பகுதியினை உரிய முறையில் ஆய்வு செய்து உடனடியாக இனி இந்தப்பள்ளம் ஏற்படாத வண்ணம் வாகன ஓட்டிகளின் உயிருக்கும், உடமைக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சாலையை செப்பனிட அப்பகுதி மக்கள் வேண்டுகோள்.
மக்கள் நலனில்
திருச்சி சாலைப்பயனீட்டாளர் நல அமைப்பு, பேட்டவாய்த்தலை காவிரி மீட்புக்குழு மற்றும் சமூக ஆர்வலர்கள்.
கொசுறு தகவல் : பாலத்தை கிரேன் வைத்து தூக்கி ஆய்வு செய்ததாகவும், பாலம் சற்றே சேதமடைந்து வலுவிழந்து உள்ளதாகவும், இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, இன்று செப்பனிட வந்தவர்களில் ஒருவர் சொன்னதாக இப் புகைப்படத்தை பகிர்ந்தவர் தகவல் தெரிவித்தார்.
புகைப்பட உதவி. திரு.சுஜோதி அவர்கள்.