குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சி

பிப்ரவரி 24 மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தென்னக
இரயில்வே திருச்சி மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சி 26.02.2025 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சமுதாயத்தின் பங்கு மற்றும் கிராம வட்டார மாவட்ட மற்றும் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி மண்டல வார்டு அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களின் செயல்பாடுகள் பணிகள் குறித்தும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளான கருக்கலைப்பு சிசுக்கொலை பாலியல் வன்முறை குழந்தை திருமணம் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தைகள் மீதான சித்திரவதைகள் குறித்தும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்களான குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் இளஞ்சிறார் நீதி சட்டம் குறித்தும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு அரசு நலத்திட்டங்களான முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் தொட்டில் குழந்தை திட்டம் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் மிஷன் வாத்சல்யா நிதி ஆதரவுத் திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம் மூவாலூர் இராமாமிர்தம் புதுமைப்பெண் திட்டம் குறித்தும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண்களான குழந்தைகள் உதவி மைய எண் 1098 பள்ளி கல்வித்துறை தொலைபேசி எண் 14417 மற்றும் பெண்கள் உதவி மைய எண் 181 செயல்பாடுகள் பணிகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில்
இரயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டனர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *